Nellai Pasanga

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.
Showing posts with label General Tamil. Show all posts

Sunday, 18 September 2016

சிற்றிலக்கியங்கள்


சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அமையும்.அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.

அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் ஆகும்.தமிழில் சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படுகின்றன.அவற்றைக் கீழே காண்போம்.


    1.சதகம்
    2.பிள்ளைக்கவி
    3.பரணி
    4.கலம்பகம்
    5.அகப்பொருட்கோவை
    6.ஐந்திணைச் செய்யுள்,
    7.வருக்கக் கோவை
    8.மும்மணிக்கோவை
    9.அங்கமாலை
    10.அட்டமங்கலம்
    11.அனுராகமாலை
    12.இரட்டைமணிமாலை
    13.இணைமணி மாலை
    14.நவமணிமாலை
    15.நான்மணிமாலை
   16. நாமமாலை
    17பல்சந்தமாலை
    18பன்மணிமாலை
    19மணிமாலை
    20புகழ்ச்சி மாலை
    21.பெருமகிழ்ச்சிமாலை
    22.வருக்கமாலை
    23.மெய்க்கீர்த்திமாலை
    24.காப்புமாலை
    25. வேனில் மாலை
    26. வசந்தமாலை
    27. தாரகைமாலை
    28. உற்பவமாலை
    29. தானைமாலை
    30. மும்மணிமாலை
    31. தண்டகமாலை
    32. வீரவெட்சிமாலை
    33. வெட்சிக்கரந்தைமஞ்சரி
    34. போர்க்கெழுவஞ்சி
    35. வரலாற்று வஞ்சி
    36. செருக்களவஞ்சி
    37. காஞ்சிமாலை
    38. நொச்சிமாலை
    39. உழிஞைமாலை
    40. தும்பைமாலை
    41. வாகைமாலை
    42. வாதோரணமஞ்சரி
    43. எண்செய்யுள்
    44. தொகைநிலைச்செய்யுள்
    45. ஒலியந்தாதி
    46. பதிற்றந்தாதி
    47. நூற்றந்தாதி
    48. உலா
    49. உலாமடல்
    50. வளமடல்
    51. ஒருபா ஒருபது
    52. இருபா இருபது
    53. ஆற்றுப்படை
    54. கண்படைநிலை
    55. துயிலெடை நிலை
    56. பெயரின்னிசை
    57. ஊரின்னிசை
    58. பெயர் நேரிசை
    59. ஊர் நேரிசை
    60. ஊர்வெண்பா
    61. விளக்குநிலை
    62. புறநிலை
    63. கடைநிலை
    64. கையறுநிலை
    65. தசாங்கப்பத்து
    66. தசாங்கத்தயல்
    67. அரசன்விருத்தம்
    68. நயனப்பத்து
    69. முலைப்பத்து
    70. பாதாதிகேசம்
    71. கேசாதிபாதம்
    72. அலங்காரபஞ்சகம்
    73. கைக்கிளை
    74. மங்கலவள்ளை
    75. தூது
    76. நானாற்பது
    77. குழமகன்
    78. தாண்டகம்
    79. பதிகம்
    80. சதகம்
    81. செவியறிவுறூஉ
    82. வாயுறைவாழ்த்து
    83. புறநிலைவாழ்த்து
    84. பவனிக்காதல்
    85. குறத்திப்பாட்டு
    86. உழத்திப்பாட்டு
    87. ஊசல்
    88. எழுகூற்றிருக்கை
    89. நாழிகைவெண்பா
    90. சின்னப்பூ
    91. விருத்தவிலக்கணம்
    92. முதுகாஞ்சி
    93. இயன்மொழி வாழ்த்து
    94. பெருமங்கலம்
    95. பெருங்காப்பியம்

    96. சிறுகாப்பியம்

>>>>>>TNPSC | தமிழ் | இலக்கணம் | இலக்கியம் <<<<<<<<

உயிரளபெடை


உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துக்களில்குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்குஒலியளவைக்கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடையஎழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறுகாட்டுவர்.
·         
அளபெடுகும்எழுத்துக்கள்
உயிரெழுத்துகளில்நெட்டெழுத்துகள்ஏழும்தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டு
அளபெடுத்த எழுத்து
அளபெடுத்துள்ள பாங்கு
குறிப்பு
பாஅல்புளிப்பினும் (பெயர்ச்சொல், புகாஅர் (வினைமுற்று) , புகாஅர்த் தெய்வம் (ஊர், ஆஅய் (அரசன்
ஆஅ
பால் - பாஅல்
செய்யுளிசைஅளபெடை (இசைநிறைஅளவெடை
கடாஅக்களிற்றின்மேல்கட்படாம் மாதர், படாஅஅமுலைமேல் துகில்
ஆஅஅ
கடா - கடாஅ, படா - படாஅஅ
செய்யுளிசைஅளபெடை (இசைநிறைஅளவெடை
பறையின்கண்ணகத்து எழுதிய குரீஇப் போல
ஈஇ
குருவி - குரீஇ
சொல்லிசைஅளபெடை
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம்இன்றிக்கெடும்
ஊஉ
உடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம்
அளபெடுக்காவிட்டாலும்செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை
பேஎம் முதிர், மன்றத்து
ஏஎ
பேம் - பேஎம் [12]
இன்னிசை அளபெடை
இன்சொலால் ஈரம் அளைஇ 
ஐஇ
அளவி - அளைஇ
சொல்லிசைஅளபெடை
கோஒல்செம்மையின் சான்றோர் பல்கி
ஓஒ
கோல் - கோஒல்
செய்யுளிசைஅளபெடை (இசைநிறைஅளவெடை
-
ஔஉ
-
-
அளபெடுக்கும் இடங்கள்
மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில்அளபெடுக்கும்.: எடுத்துக்காட்டு:
1
ஓஒதல் வேண்டும்
முதல்
2
கெடுப்பதூஉம்கெட்டார்க்கு
இடை
3
நல்ல படாஅ பறை
கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில்உயிர்நெடில்அளபெடுத்துள்ளதைக் காணலாம்.
ஓர் உயிர்நெடில்அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்துஅவ்வெழுத்திற்குஇனமான குறில் எழுத்து எழுதப்படும்.
வகைகள்
இதில்
·        செய்யுளிசைஅளபெடை,
·        இன்னிசை அளபெடை,
·        சொல்லிசைஅளபெடை
என மூன்று வகைகள் உள்ளன.
அளபெடைப் பெயர்
·        ஆடூஉ
·        மகடூஉ
இந்தச்சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக்குறிப்பிடுகிறது.