#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday, 3 September 2016

அப்துல் ரகுமான்

.
முனைவர்
சை. அப்துல் ரகுமான்

கவிக்கோ
பிறப்பு
அப்துல் ரகுமான்
1937
நவம்பர் 2
மதுரை கிழக்குச் சந்தைப்பேட்டை
இருப்பிடம்
சென்னை
தேசியம்
இந்தியர்
மற்ற பெயர்கள்
அருள்வண்ணன்
கல்வி
கலை முதுவர்
முனைவர்
பணி
பேராசிரியர்
பணியகம்
இசுலாமியக் கல்லூரி, வாணியம்பாடி
அறியப்படுவது
சர்ரியலிசக் கவிதைகள்
சமயம்
இசுலாம்
பெற்றோர்
மஹி என்னும் சையத் அஹமத் ஜைனத் பேகம்
பிள்ளைகள்
மகன்; மகள்
இணையதளம்
கவிக்கோ
அப்துல் ரகுமான்,(பிறப்பு: நவம்பர் 21937)தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூகஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி.வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார்.ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.


பிறப்பு
அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி
அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார்ஔவை துரைசாமிஅ. கி. பரந்தாமனார்அவ்வை நடராசன்அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு [1] விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார்.
வக்பு வாரிய தலைவராக
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.
நூல்கள்
படைத்தவை
வ.எண்
ஆண்டு
நூல்
வகை
குறிப்பு
01
1974
பால்வீதி
கவிதை
02
1978
நேயர் விருப்பம்
கவிதை
03
1985
கரைகளே நதியாவதில்லை
கட்டுரை
சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
04
1986
அவளுக்கு நிலா என்று பெயர்
கட்டுரை
சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
05
1986
முட்டைவாசிகள்
கட்டுரை
சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
06
1986
மரணம் முற்றுப்புள்ளி அல்ல
கட்டுரை
சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
07
1987
விலங்குகள் இல்லாத கவிதை
கட்டுரை
08
1987
சொந்தச் சிறைகள்
வசன கவிதை
சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
09
1989
புதுக்கவிதையில் குறியீடு
ஆய்வு
முனைவர் பட்ட ஆய்வேடு
10
1989
சுட்டுவிரல்
பாடல்
முத்தாரத்தில் வெளிவந்த தொடர்
11
1990
கம்பனின் அரசியல் கோட்பாடு
ஆய்வு
அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு
12
1995
ஆலாபனை
கவிதை
சாகித்திய அகாதமி விருது பெற்றது. பாக்யா இதழில் வெளிவந்த தொடர்.
13
1998
பித்தன்
கவிதை
குங்குமத்தில் வெளிவந்த தொடர்
14
1998
விதைபோல் விழுந்தவன்
கவியரங்கக்கவிதைகள்
அண்ணா கவியரங்கக் கவிதைகள்
15
1998
முத்தமிழின் முகவரி
கவியரங்கக் கவிதைகள்
மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை
16
1999
பூப்படைந்த சபதம்
கட்டுரை
17
1999
தொலைப்பேசிக் கண்ணீர்
கட்டுரை
18
2003
காற்று என் மனைவி
கட்டுரை
19
2003
உறங்கும் அழகி
கட்டுரை
20
2003
நெருப்பை அணைக்கும் நெருப்பு
கட்டுரை
21
2003
பசி எந்தச் சாதி
கட்டுரை
22
2003
நிலவிலிருந்து வந்தவன்
கட்டுரை
23
2003
கடவுளின் முகவரி
கட்டுரை
24
2003
முத்தங்கள் ஓய்வதில்லை
கட்டுரை
25
2004
காக்கைச் சோறு
கட்டுரை
26
2004
சோதிமிகு நவகவிதை
கட்டுரை
27
2004
மின்மினிகளால் ஒரு கடிதம்
கவிதை
கஜல் கவிதைகள்
28
2005
தாகூரின் 'சித்ரா'
மொழிபெயர்ப்பு
29
2005
ரகசிய பூ
கவிதை
30
2005
சிலந்தியின் வீடு
கட்டுரை
31
2005
இது சிறகுகளின் நேரம்
கட்டுரை
சூனியர் விகடனில் வெளிவந்த தொடர்
32
2006
இல்லையிலும் இருக்கிறான்
கட்டுரை
33
2006
பறவையின் பாதை
கவிதை
34
2007
இறந்ததால் பிறந்தவன்
கவியரங்க கவிதை
முதல் தொகுதி
35
2008
தட்டாதே திறந்திருக்கிறது
கட்டுரை
36
2010
எம்மொழி செம்மொழி
கட்டுரை
37
2010
பூக்காலம்
கட்டுரை
38
2011
தேவகானம்
கவிதை
39
கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை
கவிதை
40
2013
பாலை நிலா
கவிதை
நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள்
·         முத்தாரத்தில் வெளிவந்த கேள்வி - பதில்
·         ஆனந்தவிகடனில் வெளிவந்த ஈழ வரலாறு
·         கவியரங்கக் கவிதைகள்
பதிப்பித்தவை
·         குணங்குடியார் பாடற்கோவை
·         ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள்
இதழ்ப் பணி
விருதுகள்
கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு:
வ.எண்
ஆண்டு
விருது
வழங்கியவர்
குறிப்பு
1
1986
கவியரசர் பாரிவிழா விருது
குன்றக்குடி அடிகளார்
2
1989
தமிழன்னை விருது
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்
இவ்விருது புதுக்கவிதைக்காக வழங்கப்பட்டது
3
1989
பாரதிதாசன் விருது
தமிழக அரசு
4
1989
கலைமாமணி விருது
தமிழக அரசு
5
1992
அக்ஷர விருது
அக்னி
6
1996
சிற்பி அறக்கட்டளை விருது
கவிஞர் சிற்பி அறக்கட்டளை
7
1997
கலைஞர் விருது
தி. மு,க.
ஒரு இலட்சம் ரூபாய்
8
1998
ராணா இலக்கிய விருது
9
1999
சாகித்ய அகாடமி விருது
சாகித்ய அகாடமி, டெல்லி
ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது
10
2006
கம்ப காவலர்
கொழும்பு கம்பன் கழகம், இலங்கை
11
2007
பொதிகை விருது
பொதிகை தொலைக்காட்சி, சென்னை
12
2007
கம்பர் விருது
கம்பன் கழகம், சென்னை
13
2007
சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு
தினத்தந்தி நாளிதழ்
ஒரு இலட்சம் ரூபாய்
14
2008
உமறு புலவர் விருது
ஒரு இலட்சம் ரூபாய்