Showing posts with label இலக்கணம். Show all posts
Friday, 23 September 2016
வேற்றுமைத் தொகை
வேற்றுமை எட்டு வகைப்படும். அவை,
1) முதல் வேற்றுமை
2) இரண்டாம் வேற்றுமை 3) மூன்றாம் வேற்றுமை 4) நான்காம் வேற்றுமை 5) ஐந்தாம் வேற்றுமை 6) ஆறாம் வேற்றுமை 7) ஏழாம் வேற்றுமை 8) எட்டாம் வேற்றுமை
இவற்றில் முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனப்படும். எட்டாம் வேற்றுமை, விளி வேற்றுமை எனப்படும். எழுவாய் வேற்றுமை, விளி வேற்றுமை இரண்டிற்கும் உருபுகள் இல்லை. ஏனைய ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன.
ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும் மறைந்து நின்றும் சொற்றொடரில் தம் பொருள் உணர்த்தும். உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில் பொருள் உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகைநிலைத் தொடர்கள் எனப்படும். வேற்றுமைகளும் அவற்றிற்குரிய உருபுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1) இரண்டாம் வேற்றுமை - ஐ
2) மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு 3) நான்காம் வேற்றுமை - கு 4) ஐந்தாம் வேற்றுமை - இன், இல் 5) ஆறாம் வேற்றுமை - அது, ஆது 6) ஏழாம் வேற்றுமை - கண்
தொகை என்பது உருபு மறைதல் என்பதால் தொகைநிலைத் தொடரில் வேற்றுமைத் தொகை என்பது இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைத் தொகைகளையே குறிக்கும்.
இரண்டு முதலாம் இடைஆறு உருபும்
வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே (நன்னூல் - 363)
இவ்வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், வேற்றுமை உருபு மட்டும் மறைந்து வருதல், வேற்றுமை உருபும் பயனும் சேர்ந்து மறைந்து வருதல் என இரண்டு வகைப்படும்.
எடுத்துக்காட்டு :
ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே வரும்; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக வருவதில்லை
.
|
வினைத் தொகை
வினைத்தொகை என்பது, பெயரெச்சத் தொடராகும். பெயரெச்சமாக வரும் வினையில், பெயரெச்சத்தின் விகுதியும், காலம் காட்டும் இடைநிலையும் கெட்டு, வினையின் முதல்நிலை மட்டும் நின்று அதனோடு பெயர்ச்சொல் தொடர்வதாகும். அதனால் வினைத்தொகையைக் காலம் கரந்த பெயரெச்சம் என்பர். கரந்த என்றால் மறைந்த என்பது பொருள்.
(எ-டு) வீசு தென்றல்
இத்தொடரை விரித்துக் கூறும்பொழுது, வீசிய தென்றல், வீசுகின்ற தென்றல், வீசும் தென்றல் என முக்காலத்திற்கும் பொருந்திவரக் காணலாம்.இவ்வாறு வினைத்தொகை முக்காலமும் குறித்து வருமானால் அவை முக்கால வினைத் தொகைகள் எனப்படும்.
வீசிய, வீசுகிற, வீசும் என்னும் பெயரெச்சங்களின் விகுதியும் காலமும் கெட்டு, வீசுதல் என்னும் தொழிலின் முதல்நிலையான வீசு என்பது மட்டும் நின்று, தென்றல் என்னும் பெயரொடு வந்து வினைத்தொகை ஆயிற்று.
சில வினைச் சொற்களின் வினைப் பகுதியான முதல் நிலை விகாரப்பட்டும் வினைத்தொகை வரும்.
(எ-டு) வருபுனல்
இவ்வினைத்தொகையில் வா என்னும் வினைப் பகுதியான முதல்நிலை வரு எனத் திரிந்து புனல் என்னும் பெயரோடு வந்தது.
| |
பண்புத் தொகை
பண்புத் தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப் பெயர் தொடர்வதாகும்.
பண்பு என்பது வண்ணம், வடிவம், அளவு, சுவை முதலியனவாகும்.
பண்பை உடையது எதுவோ அது பண்பி எனப்படும்.
ஆகிய என்பது, பண்புக்கும் பண்பிக்கும் உள்ள ஒற்றுமையை விளக்குவதற்காக வரும் இடைச்சொல். இதனைப் பண்பு உருபு என்பர்.
(எ-டு)
செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை
வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை இன்சொல் - சுவைப் பண்புத் தொகை
இவை விரியும்பொழுது, செம்மையாகிய தாமரை, வட்டமாகிய நிலா, மூன்றாகிய தமிழ், இனிமையாகிய சொல் என விரியும்.
மேலே கூறிய எடுத்துக்காட்டுகளில் செந்தாமரை என்பது செம்மை ஆகிய தாமரை என விரியும் எனப் பார்த்தோம். இவற்றுள் செம்மை என்பது பண்பு; ஆகிய என்பது பண்பு உருபு; தாமரை என்பது பண்பி. இதேபோல மற்ற எடுத்துக்காட்டுகளைப் பிரித்து அறிந்து கொள்க.
பண்புத்தொகையில் ஒருவகை இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது, ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ ஒரு பொருள் குறித்து வருவதாகும்.
(எ-டு)
தலைவர் அப்துல்கலாம்
பலா மரம்
முதல் தொடரில் தலைவர் என்னும் சொல் பொதுப் பெயர்.அப்துல்கலாம் என்னும் பெயர் சிறப்புப் பெயர். இத்தொடர் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பொதுப் பெயரும் சிறப்பு பெயரும் ஒருவரையே குறித்து வந்தது கவனிக்கத்தக்கது.
இரண்டாம் தொடரில் பலா என்பது மர வகைகளில் ஒன்றின் சிறப்புப் பெயர். மரம் என்பது பொதுப் பெயர். இத்தொடர் சிறப்புப் பெயரொடு பொதுப் பெயர் தொடர வந்த இருபெயரொட்டுப் பண்புத் தொகை. சிறப்புப் பெயரும் பொதுப் பெயரும் ஒரு பொருளையே குறித்து வந்தன.
தலைவர், பலா என்னும் சொற்கள் பண்புப் பெயர் ஆகாவிடினும் பண்புத் தொகை போல ஆகிய என்னும் உருபு பெற்று ஒரு பொருளைச் சிறப்பிப்பதனால் இத்தொடர்கள் பண்புத் தொகைத் தொடர்களாகக் கருதப் பெறுகின்றன.
| |
உவமைத் தொகை
உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமை உருபுகள் மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல் தொடர்வதாகும்.
போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன முதலியனவும் உவம உருபுகளாகும்.
(எ-டு.) பவளவாய்
இது பவளம் போலும் வாய் என விரியும். இவற்றுள், பவளம் என்பது உவமானம்; போலும் என்பது உவமை உருபு; வாய் என்பது உவமேயம். (உவமானம் - உவமையாகும் பொருள்; உவமேயம் - உவமிக்கப்படும் பொருள்.)
இவ்வுவமைத் தொகை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி வரும். (மெய் - வடிவம்; உரு - வண்ணம்.)
(எ-டு.)
இவை விரியும் பொழுது, புலி போலும் மனிதன், மழை போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.
| |||||||||||||
உம்மைத் தொகை
அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பதுஉம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.
எ-டு :
இவற்றை விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும் காலும், தொடியும் கஃசும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும் என விரியும்.
| |||||||||||||
அன்மொழித் தொகை
அன்மொழி என்பது அல் + மொழி எனப் பிரியும். அல் என்பதற்கு அல்லாத என்பது பொருள். மொழி என்றால் சொல் என்று பொருள். கூறப்படும் தொகைநிலைத் தொடரிலே இடம் பெறாத (அல்லாத) சொற்களைச் சேர்த்துப் பொருள் கொள்வதால் இத்தொகை நிலைத்தொடர்அன்மொழித்தொகை எனப்பட்டது. இது, வேற்றுமைத்தொகை முதலிய ஐவகைத்தொகை நிலைத் தொடர்மொழிகளுக்கு உரிய உருபுகள் தத்தம் பொருள்பட மறைந்து நிற்பதோடு மட்டுமல்லாது அவற்றிற்குப் புறத்தே அத்தொகைநிலைத் தொடர்களோடு தொடர்புடைய பிறசொற்களும் மறைந்து நின்று பொருள் உணர்த்தல் ஆகும். இது,
1) வேற்றுமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
2) வினைத்தொகைப் புறத்து பிறந்த அன்மொழித்தொகை 3) பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை 4) உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை 5) உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
என ஐந்து வகைப்படும்.
| |
| வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை | |
வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை இரண்டாம் வேற்றுமைத் தொகை முதல் ஏழாம் வேற்றுமைத் தொகை வரை சேர்த்து ஆறு வகைப்படும்.
(எ-டு) பூங்குழல் வந்தாள்
பூங்குழல் என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பூவையுடைய குழலை உடையாள்’ என விரியும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) பொற்றொடி வந்தாள்
பொற்றொடி என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகைநிலைத் தொடர், ‘பொன்னாலாகிய தொடியினை உடையாள்’ என விரியும்போது மூன்றாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கவியிலக்கணம்
கவியிலக்கணம் என்னும் நான்காம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கவிக்கு இலக்கணம் சொல்லப்பட்ட நூல்’ என விரியும்போது,நான்காம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைஎனப்படும்.
(எ-டு) பொற்றாலி
பொற்றாலி என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகைநிலைத் தொடர், ‘பொன்னின் ஆகிய தாலியினை உடையாள்’ என விரியும்போது, ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கிள்ளிகுடி
கிள்ளிகுடி என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், ‘கிள்ளியினது குடியிருக்கும் ஊர்’ என விரியும் போது, ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
(எ-டு) கீழ் வயிற்றுக் கழலை
கீழ் வயிற்றுக் கழலை என்னும் ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை நிலைத் தொடர், ‘கீழ் வயிற்றின் கண் எழுந்த கழலையைப் போன்றவன்’ என விரியும்போது, ஏழாம் வேற்றுமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
| |
| வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை | |
(எ-டு) தாழ்குழல் பேசினாள்
தாழ்குழல் என்னும் வினைத்தொகை, ‘தாழ்ந்த குழலினை உடையாள்’ என விரியும்போது, வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
| |
| பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை | |
(எ-டு) கருங்குழல்
கருங்குழல் என்னும் பண்புத் தொகைநிலைத் தொடர் ‘கருமையாகிய குழலினை உடையாள்’ என விரியும்போது, பண்புத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
| |
| உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை | |
(எ-டு) தேன்மொழி
தேன்மொழி என்னும் உவமைத் தொகைநிலைத் தொடர் ‘தேன் போன்ற மொழியை உடையாள்’ என விரியும்போது, உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
| |
| உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை | |
(எ-டு) உயிர்மெய்
உயிர்மெய் என்னும் உம்மைத் தொகைநிலைத் தொடர் ‘உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து’ என விரியும்போது, உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
| |
பன்மை
ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. பல பொருட்களைக் குறிப்பது பன்மை. உயர்திணையில் ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டும் ஒருமை. அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. உயர்திணையில்
பலர்பாலைக் குறிக்கும் பெயர்ச்சொல் பன்மை. அஃறிணையில் 'கள்' என்னும் விகுதி பெற்று வரும் சொற்கள் பன்மை. கள்-விகுதி பெறாமல்
வினைமுற்றால் பல-பொருளை உணர்த்தும் பன்மைகளும் உண்டு. இதனைப் பால்பகா அஃறிணைப் பெயர் என்பர்.
எடுத்துக்காட்டு
·
மலர் விரிந்தது - இதில் 'மலர்'
என்பது ஒருமை.
·
மலர்கள் விரிந்தன. - இதில் 'மலர்கள்'
என்பது பன்மை
அறுவகைப் பெயர்களில் பன்மை
|
பெயர்
|
ஒருமை
|
பன்மை
|
|
பொருள்
|
மலர்
|
மலர்கள்
|
|
இடம்
|
மலை
|
மலைகள்
|
|
காலம்
|
நொடி
|
நொடிகள்
|
|
சினை
|
விரல்
|
விரல்கள்
|
|
குணம்
|
அழகு
|
(பல்வகை) அழகு
|
|
தொழில்
|
செலவு
|
செலவுகள்
|
Subscribe to:
Posts
(
Atom
)
