#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday, 23 September 2016

உம்மைத் தொகை


 
அளவுப் பொருளில் இரண்டு சொற்கள் தொடர்ந்து வர அவற்றின் இடையிலும் இறுதியிலும் உம்மையாகிய உருபு மறைந்து நிற்பதுஉம்மைத் தொகை எனப்படும். அவ்வளவுகள் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு ஆகும்.
எ-டு :
ஒன்றேகால்-எண்ணல் அளவை உம்மைத் தொகை
தொடியேகஃசு-எடுத்தல் அளவை உம்மைத் தொகை
மரக்கால் படி-முகத்தல் அளவை உம்மைத் தொகை
அடி அங்குலம்-நீட்டல் அளவை உம்மைத் தொகை
இவற்றை விரித்துக் கூறும் பொழுது, ஒன்றும் காலும், தொடியும் கஃசும், மரக்காலும் படியும், அடியும் அங்குலமும் என விரியும்.