#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday, 18 September 2016

உயிரளபெடை


உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துக்களில்குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்குஒலியளவைக்கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடையஎழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறுகாட்டுவர்.
·         
அளபெடுகும்எழுத்துக்கள்
உயிரெழுத்துகளில்நெட்டெழுத்துகள்ஏழும்தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டு
அளபெடுத்த எழுத்து
அளபெடுத்துள்ள பாங்கு
குறிப்பு
பாஅல்புளிப்பினும் (பெயர்ச்சொல், புகாஅர் (வினைமுற்று) , புகாஅர்த் தெய்வம் (ஊர், ஆஅய் (அரசன்
ஆஅ
பால் - பாஅல்
செய்யுளிசைஅளபெடை (இசைநிறைஅளவெடை
கடாஅக்களிற்றின்மேல்கட்படாம் மாதர், படாஅஅமுலைமேல் துகில்
ஆஅஅ
கடா - கடாஅ, படா - படாஅஅ
செய்யுளிசைஅளபெடை (இசைநிறைஅளவெடை
பறையின்கண்ணகத்து எழுதிய குரீஇப் போல
ஈஇ
குருவி - குரீஇ
சொல்லிசைஅளபெடை
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம்இன்றிக்கெடும்
ஊஉ
உடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம்
அளபெடுக்காவிட்டாலும்செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை
பேஎம் முதிர், மன்றத்து
ஏஎ
பேம் - பேஎம் [12]
இன்னிசை அளபெடை
இன்சொலால் ஈரம் அளைஇ 
ஐஇ
அளவி - அளைஇ
சொல்லிசைஅளபெடை
கோஒல்செம்மையின் சான்றோர் பல்கி
ஓஒ
கோல் - கோஒல்
செய்யுளிசைஅளபெடை (இசைநிறைஅளவெடை
-
ஔஉ
-
-
அளபெடுக்கும் இடங்கள்
மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில்அளபெடுக்கும்.: எடுத்துக்காட்டு:
1
ஓஒதல் வேண்டும்
முதல்
2
கெடுப்பதூஉம்கெட்டார்க்கு
இடை
3
நல்ல படாஅ பறை
கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில்உயிர்நெடில்அளபெடுத்துள்ளதைக் காணலாம்.
ஓர் உயிர்நெடில்அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்துஅவ்வெழுத்திற்குஇனமான குறில் எழுத்து எழுதப்படும்.
வகைகள்
இதில்
·        செய்யுளிசைஅளபெடை,
·        இன்னிசை அளபெடை,
·        சொல்லிசைஅளபெடை
என மூன்று வகைகள் உள்ளன.
அளபெடைப் பெயர்
·        ஆடூஉ
·        மகடூஉ
இந்தச்சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக்குறிப்பிடுகிறது.