#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday, 3 September 2016

தேவதேவன்


பெயர்:  பிச்சுமணி கைவல்யம்
புனைபெயர்: தேவதேவன்
பிறந்த இடம்: இராஜாகோயில், காமராஜர் மாவட்டம்(05.05.1948)
 
                                    படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
  • தேவதேவன் கதைகள்
கவிதைத் தொகுப்புகள்:
  • தேவதேவன் கவிதைகள்
  • மார்கழி
  • குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976)
  • மின்னற்பொழுதே தூரம் (1981)
  • மாற்றப்படாத வீடு (1984)
  • பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990)
  • நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991)
  • சின்னஞ்சிறிய சோகம் (1992)
  • நட்சத்திர மீன் (1994)
  • அந்தரத்திலே ஓர் இருக்கை (1995)
  • நார்சிஸஸ் வனம் (1996)
  • புல்வெளியில் ஒரு கல் (1998)
  • விண்ணளவு பூமி (2000)
  • விரும்பியதெல்லாம் (2002)
  • விடிந்தும் விடியாப் பொழுது (2003)
விருதுகள்:
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • தேவமகள் அறக்கட்டளை விருது
  • தமிழக அரசின் விருது
  • விளக்கு விருது
  • வழங்கும் 'சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது' - தூத்துக்குடி பியர்ல் பவுண்டேஷன் - 2011
இவர் பற்றி:
  • ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். இளம்வயதில் மரபுக்கவிதைகள் எழுதிவந்த கைவல்யம் தோரோ, எமர்சன் ஆகியோரின் படைப்புகளால் கவரப்பட்டு நவீனக் கவிதைகளை புணைய தொடங்கினார். குறுகிய காலம் கேரளத்தில் வாழ்ந்தபோது அங்கிருந்த இயற்கைக் காட்சிகளினால் ஆழ்மான மனநகர்வுக்கு உள்ளாகி நிறைய கவிதைகள் எழுதினார். தேவ தேவன் வெறுமனே 'புல், மரம், வீடு என பராக்குப் பார்க்கும் மனிதர் அல்ல. இயற்கையின் விசித்திரங்களுள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் செறிவைக் கவிதையாக்குவது அவரது வழமையாகும். கவிஞனுக்கும் தத்துவத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை என முழங்குதலே தத்துவமாகிப் போன சூழலில் கவிதை அப்பழுக்கற்றது. தூய பளிங்கு போன்றது. கள்ளங்கபடமற்ற அப்பாவித்தனமானது. குழந்தைமையானது. கருத்தியலையோ தத்துவத்தையோ சுமப்பதற்கு லாயக்கற்றது என்ற கருத்து தேவதேவனுக்கு உண்டு. சுருங்கக் கூறின் பிரக்ஞையில் ததும்பி வழியும் சொற்கள், மின்னற் பொழுதில் பதிவாகும் காட்சியின் உக்கிரம் கவிஞருக்குக் கவிதையாகிறது. தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். கைவல்யத்தின் கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையைக் கொண்டவை. இயற்கைசார்ந்த படிமங்களை உள்ளொடுங்கிய தத்துவ நோக்குடன் சொல்பவை. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும். நவீன வாழ்க்கையின் அழகின்மையையும் இலக்கின்மையையும் விமர்சிக்கும் தேவதேவன் இயற்கையின் பேரழகையும் அதன் சாரமான கருணையையும் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். கவிதைக்கு புற அரசியல் தேவையில்லை, கவிதை தன்னளவிலேயே அரசியல்செயல்பாடுதான் என்று வாதிடும் தேவதேவன் தமிழக தலித்துக்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக மிகுந்த உணர்ச்சிப் பங்குடன் கண்டனக் கவிதைகளை எழுதியுள்ளார்.