Wednesday, 21 September 2016
ஒளகாரக்குறுக்கம்
ஒளகாரம் நெடில் எழுத்து என்பதால் இரண்டு மாத்திரை பெறும்.
ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து
ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர்.ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை
நேரம் ஒலிக்கும்.
ஒளவையார், மௌவல், வௌவால்.
ஒளகாரம் தனியே
ஒலிக்கும்போது குறைந்து ஒலிப்பதில்லை.
தற்சுட்டு அளபு ஒழி ஐம் மூவழியும்
நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்
நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்
(நன்னூல் 95)
(பொருள்: ஐகார எழுத்து சொல்லில் வரும்போது, தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும்
அளபெடையிலும் தவிர மற்ற இடங்களில் (சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்)
குறைந்தே ஒலிக்கும். ஒளகார எழுத்தும் சொல்லின் முதலில் வரும்போது குறைந்து
ஒலிக்கும்