Wednesday, 21 September 2016
இடையினம்
மெய் எழுத்துகளில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில்
ஒலிக்கும் எழுத்துகளை இடையினம் என்று கூறுவர். ய், ர், ல், வ், ழ், ள் என்ற ஆறு மெய்
எழுத்துகளும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின
எழுத்துகள் ஆகும்.
இடையினம் ய, ர, ல, வ, ழ, ள என ஆறே (70)
என்னும் நன்னூல்
நூற்பா இடையின எழுத்துகள் எவை என்று குறிக்கிறது.