Friday, 23 September 2016
பெயர்ச்சொல்
ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவது பெயர்ச்சொல்ஆகும். மரம், கல், மண் முதலியன பெயர்ச்சொற்கள் ஆகும். பெயர்ச் சொற்களுக்கு இரண்டு வகையாக இலக்கணம் சொல்லப்படுகிறது.
1. பெயர்ச் சொல் வேற்றுமையை ஏற்கும்.
2. பெயர்ச் சொல் காலம் காட்டாது.
பெயர்ச் சொற்களுக்குப் பின் வேற்றுமை உருபுகள் வந்து நிற்கும்.
நாய் என்பது ஒரு பெயர்ச் சொல். இதனுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து பின்வருமாறு அமையும்.
நாய் + ஐ = நாயை - (இரண்டாம் வேற்றுமை)
நாய் + ஒடு = நாயொடு - (மூன்றாம் வேற்றுமை)
நாய் + கு = நாய்க்கு - (நான்காம் வேற்றுமை)
நாய், கல், மரம், முதலிய பெயர்ச் சொற்கள் காலத்தைக் காட்டவில்லை என்பதை அறியலாம்.