சிற்றிலக்கியங்கள்
நாயக்கர் காலமே “சிற்றிலக்கிய காலம்”
சிற்றிலக்கியதிற்கு பிரபந்தம் என்ற பெயரும் உண்டு.
பிரபந்தம் என்ற வடமொழி சொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்று
பொருள்.
பிரபந்தம் என்ற சொல்லை முதலில் தமிழில் கொண்டுவந்தவர் = நாதமுனிகள்
அணைத்து சிற்றிலக்கியங்களும் தொல்காப்பியரின் “விருந்து” என்னும்
வகையுள் அடக்குவர்.
சிற்றிலக்கியங்களில் இலக்கணத்தைக் கூறும் நூல்கள் = பட்டியல்
நூல்கள்
சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் = பன்னிரு
பாட்டியல்
சிற்றிலக்கிய வகை = 96
சிற்றிலக்கியம் 96 வகை என முதலில் கூறிய நூல்
= பிரபந்த மரபியல்
96 வகை சிற்றிலக்கியங்களின் பெயரை முதலில் கூறிய நூல் = வீரமாமுனிவரின்
சதுரகராதி
பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது = பன்னிரு பாட்டியல்
வெண்பாப் பாட்டியலின் வேறு பெயர் = வச்சணந்தி மாலை
நவநீதப் பாட்டியலின் வேறு பெயர் = கலித்துறைப் பாட்டியல்
வரையறுத்தப் பாட்டியலின் வேறு பெயர் = சம்பந்த பாட்டியல்
மங்கலப் பொருத்தத்தை மட்டும் வரையறுத்துக் கூறும் நூல் =
வரையறுத்தப் பாட்டியல்
சிற்றிலக்கிய வகைகளைக் கூறாத பாட்டியல் நூல் = வரையறுத்தப்
பாட்டியல்
முழுமையாகச் செய்யுள் இலக்கணங்களையும் பாட்டியல் கருத்துகளையும்
கூறும் நூல் = சிதம்பர பாட்டியல்
சிற்றிலக்கிய வேந்தர் = குமரகுருபரர்