#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Saturday 3 September 2016

இரா. மீனாட்சி


 
1970 முதல் எழுதிவரும் இரா. மீனாட்சி இன்றைய தமிழ்ப் பெண்கவிஞர்களுள்
 முதன்மையானவர். 1944இல் விருது நகரில் பிறந்த இவர் மனையியல்
சமூகவியல் பட்டங்கள் பெற்றவர். இளமைக் கால முதலே காந்தியச் 
சிந்தனை, சமூகத் தொண்டு, பெண்ணியச் சிந்தனை இவற்றால் வளர்ந்தவர். 
இப்போது புதுச்சேரியில் உள்ள உலக வளாகமாகிய ஆரோவில்லில்
 சுற்றுப்புறச் சிற்றூர் இளைஞர்க்கான கல்வித் தொண்டிலும் பிற சமூகப்
 பணிகளிலும் முழுநேர ஊழியராகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
கிராமச் செய்தி மடல்எனும் இதழின் ஆசிரியராகவும் உள்ளார். 
 
நெருஞ்சி’, ‘சுடுபூக்கள்', ‘தீபாவளிப்பகல்’, ‘மறுபயணம்எனும் இவரது
 நான்கு கவிதைத் தொகுப்புகளையும் இணைத்து மீனாட்சி கவிதைகள்
எனும் தொகுப்பு 2002இல் வெளிவந்துள்ளது. 2006இல் உதய நகரிலிருந்து’ 
எனும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. 
 
தமிழில் இப்போது பரவலாக வெளியாகி வரவேற்புக்கும் திறனாய்வுக்கும்
 உட்பட்டு வருகின்ற பெண்ணியக் கவிதைகளின் மூல முன்னோடி 
இரா. மீனாட்சியே ஆவார்.   ஆயினும் தம்மைப் பெண்ணியம் எனும் 

ஒரு சார்பு நிலைக்கு உட்படுத்திக் கொள்ளாத ஒரு பொதுத்தன்மையையே 
தமக்குரிய இயல்பாகக் கொண்டிருக்கிறார்.   பல்வேறு வகையிலும் ஒடுக்குமுறைக்கு
 ஆளாகித் தவிக்கும் பெண்ணின் அவலங்கள், சமூக - பண்பாட்டுச் சீரழிவுகள் 
இவற்றுக்கெதிரான குரல் இவர் கவிதைகளில் ஒலிப்பது.   தமது எழுத்தின் மீது 
எந்த இயக்கச் சார்பும் படியவிடாத இவர் மானுட விடுதலையிலும்
மதிப்பீடுகளிலும், உலக ஒருமையிலும் நம்பிக்கை கொண்டு எழுதுபவர். 
ஒரு சிறுமிக்குரிய வியப்புநிறைந்த விழிகளுடன் இயற்கையின் 
வனப்புகளைப் பார்ப்பதும் தமது வெளிநாட்டு அனுபவங்களின் 
 சேமிப்பைத் தமக்கேயுரிய அழகுணர்ச்சியும் மானிட உன்னதங்களும் 
கொண்டு படைப்பதும் மீனாட்சி கவிதைகளின் தனித்தன்மைகள். 
 

 
http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt01/images/mat01006gree.gif தெருப்பாவை 
 
நாற்சந்தி நடுமேடை
வலம் வரும் கிழட்டுப் பேருந்துச் சக்கரங்கள்.
காற்றில் திணறும் ஏழைவண்டிச் சக்கரங்கள்.
வாடகை வண்டிகள், மகிழுந்துகள்.
வழுக்கிச் செல்லும் சக்கரங்கள். 
 
இடையே,
கால்விளங்கா அரை நிர்வாணம்.
நான்கு காலில்
நாய்போல் ஊர்கிறது.
சக்கரங்களுக்கு நடுவே ஊளை.
கலக்கம்.
ஊனப் பிறவிக்கு
ஊர்கூடிப் பரிந்துரைகள். 
 
ஏனாம்?
மண்ணில் தவழ்ந்தாலும்
இளமைப் பொங்கலிடும் பேதைப் பெண்.
பேதை அவள், பெண்! 
 
கவிதை காட்டும் காட்சியும், காட்சி உணர்த்தும் மனிதமன இழிவும்
அதைக்கண்டு பதைக்கும் கவிஞரின் அறச்சினமும் கவிதையில்
 வெளிப்படையாகவே தெரிகின்றன.   கால்கள் ஊனமான, நான்குகால் 
விலங்குபோல் நடமாடும் பெண் ஒருத்தி நாற்சந்திப் போக்குவரவு நெரிசலில் 
ஏதோ வண்டியில் அடிபட்டுச் செத்துப் போகிறாள். இது நிகழ்ச்சி. 
 
இந்த நிகழ்ச்சியில் சுற்றிலும் நின்று இரக்கம் காட்டும் கூட்டத்தின் மன 
ஊனத்தைக் கவிஞர் அம்பலப்படுத்துகிறார்.   ஊர் கூடிப் பேசும் பரிந்துரைகள் 
எதற்காக?   ஓர் உயிரிழப்புக்காகவா, ஊனப்பிறவி என்பதற்காகவா, பெண்எ
ன்பதற்காகவா? இல்லை, அவள் "இளமைப் பொங்கலிடும் பேதைப் பெண்" 
என்பதற்காக. ஓர் ஊனப் பெண்ணிடம் கூட இளமைப் பொங்கலை உன்னித்துப் 
பார்க்கும் அழுக்குமனம் கவிஞரை அசைக்கிறது.   ஊனப் பிறவி என்பதைச் சற்று 
விரிவாக்கிப் பார்த்தால், பெண்ணே இந்தச் சமூகத்தில் ஊனப் பிறவியாக 
வாழ்ந்து மடிய நேர்வதையும், அவள் மீதான போலிப் பரிவுகளுக்கு அவள் 
பெண்ணாக, பேதையாக, இளமை அழகோடு இருப்பதே காரணம் என்பதையும் 
காண முடிகிறது. 
 
கவிதையின் அடிப்படை முறைகேடான, இழிவான பாலுணர்ச்சி. வண்டிகளின் 
 வருணனைகளில் கூடப் பாலுணர்ச்சியைக் குறிப்பாகக் காட்டும் தன்மையைப்
 பார்க்கலாம்.   கிழட்டுப் பேருந்துச் சக்கரங்கள்’, ‘வாடகை வண்டிகள்’, ‘மகிழுந்துகள்
என்பவை அத்தகையவை. 
 
அழகும் இளமையும் ஒருங்கிணையாத இடத்திலும் கூடப் பெண்ணைச் 
சதையாக நோக்கும் இழிபார்வையைக் கண்டனம் செய்கிறது கவிதை.



Home            1  2  3  4  . . .