Saturday, 3 September 2016
கபிலர்
Nellai pasanga
01:15
* மாணிக்கவாசகர் பிறந்த
திருவாதவூரில் பிறந்தவர் கபிலர். குறிஞ்சிக் கவி பாடுவதில் வல்லவர்.
* புலன் அழுகற்ற அந்தணன் என்று
இவரைப் பாராட்டியவர் நப்பசலையார்.
* நல்லிசை வாய்மொழிக் கபிலன்
என்று நக்கீரரால் பாராட்டப்பெற்றவர்.
* பரணர், இடைக்காடர்,
பாரி வள்ளல் ஆகியோரின் நண்பர்கள் கபிலர்.
* பாரி வள்ளலின் அவைப்
புலவராகவும் கபிலர் திகழ்ந்தார்.
* பாரி மகளிரை அழைத்துச் சென்று
இருங்கோவேள், விச்சுவக்கோ ஆகிய மன்னர்களிடம் அப்பெண்களை
மணந்து கொள்ள வேண்டியவர் கபிலர்.
* வரலாற்றுச் செய்திகளை
மிகுதியாக பாடிய பரணர் கபிலரின் நண்பர் ஆவார்.
கோவூர் கிழார்
* உறையூர் சோழருக்கும்
(நெடுங்கிள்ளி) புகார் சோழருக்கும் (நலங்கிள்ளி) இடையில் போர் நிகழாமல் இருக்கத்
தூது சென்றவர் கோவூர் கிழார்.
* மலையமான் திருமுடிக்காரியின்
குழந்தைகளை கிள்ளி வளவன் யானைக்காலில் இரட்டுக் கொல்ல முயன்றபோது தடுத்து
நிறுத்தியவர் இவர்.
சோறும் நீரும் இரு மருந்து என்று
பாடியவர் கோவூர் கிழார்.
ஒளவையார்
* ஒளவை என்பதற்கு தாய் என்று
பொருள் வழங்கப்படுகிறது. அதியமானின் அவைப்புலவர் மற்றும் நண்பராகத் திகழ்ந்தவர்.
* அதியமானுக்கும்
தொண்டைமானுக்கும் இடையே தூது சென்றவர் ஒளவையார்.
* நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும என்று நெல்லிக்கனி தந்தபோது அதியமானை வாழ்த்தியவர் ஒளவையார்.
* இலக்கிய வரலாற்றில் ஐந்து ஒளவையார்கள் உள்ளனர். 1. சுட்ட
கனி வேண்டுமா, சுடாத கனி வேண்டுமா என்று கேட்ட புராண
ஒளவையார். 2. அதியமானைப் பாடிய புறநானூற்று ஒளவையார். 4.
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் மூதுரை, நல்வழி போன்ற சிறுவர் நீதி நூல்களைப் பாடிய சோழர் கால ஒளவையார். 4.தனிப்பாடல் திரட்டில் உள்ள சில பாடல்களைப் பாடிய இடைக்கால ஒளவையார்.
பிசிராந்தையார்
* பாண்டிய நாட்டுப் புலவரான
பிசிராந்தையார் தலைமுடி நரைக்காமல் இருக்கக் காரணம் உரைத்தவர் ஆவார்.
* கோப்பெருஞ்சோழனின் நண்பர்
இவர். இருவரும் முகம் காணாமலே நட்பு கொண்டிருந்தனர்.
* கோப்பெருஞ்சோழனுடன்
வடக்கிலிருந்து உயிர் துறந்தவர் பிசிராந்தையார் ஆவார்.
பத்துப்பாட்டு
* திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்
பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
ஆகியன பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.
* திருமுருகாற்றுப்படையின் வேறு
பெயர் புலவராற்றுப்படை ஆகும்.
* பெரும்பாணாற்றுப்படையின் வேறு
பெயர் பாணாறு ஆகும்.
* முல்லைப்பாட்டின் வேறு பெயர்
நெஞ்சாற்றுப்படை ஆகும்.
* குறிஞ்சிப்பாட்டு
பெருங்குறிஞ்சி என்றும் அழைக்கப்படும்.
* பட்டினப்பாலையை வஞ்சி
நெடும்பாட்டு என்றும் அழைப்பர்.
* மலைபடுகடாம் என்பதன் வேறு
பெயர் கூத்தராற்றுப்படை ஆகும்.
* பத்துப்பாட்டில் உள்ள அக
நூல்களின் எண்ணிக்கை மூன்று, புற நூல்களின் எண்ணிக்கை ஆரு
ஆகும்.
* பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் நெடுநல்வாடை.
* பத்துப்பாட்டில் சிறிய நூல்
முல்லைப்பாட்டு, மிகப்பெரிய நூல் பொருநராற்றுப்படை.
* ஆற்றுப்படை நூல்களில்
மிகப்பெரியது மலைபடுகடாம்.
* திருமுருகாற்றுப்படையை
இயற்றியவர் நக்கீரர். நக்கீரரால் பாடப்பட்ட கடவுள் முருகன்.
* திருமுருகாற்றுப்படை கூறும்
முருகனின் அறுபடை வீடுகள் 1.திருப்பரங்குன்றம் 2,திருச்செந்தூர் 3. திருவாவினன்குடி (பழனிமலை) 4.
சுவாமிமலை 5. குன்றுதோறாடல் 6..பழமுதிர்ச்சோலை ஆகியன.
* பொருநராற்றுப்படையை
இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார். வேடம் தாங்கி நடிப்வர்கள் பொருநர்கள் ஆவர்.
* சிறுபாணாற்றுப் படையை
இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். இந்நூல் கடையெழு வள்ளல்களைப் பற்றிக் குறுகிறது.
* பேகன் மயிலுக்குப் போர்வை
தந்தான், அதியமான் நெல்லிக்கனியை ஒளவைக்கு தந்தான் என்பன
போன்ற செய்திகளை சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
* பெரும்பாணாற்றுப்படையை
இயற்றியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆவார். பட்டினப் பாலையைப் பாடியவரும் இவரே.
* திருவெஃகா என்பது காஞ்சிபுரம்
என்ற நகரம் என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.
* நப்பூதனார் முல்லைப்பாட்டை
இயற்றினார். மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் ஆவார்.
* நெடுநல்வாடையைப் பாடியவர்
நக்கீரர். நெடுநல் வாடையில் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
* கபிலர் குறிஞ்சிப்பாட்டை
இயற்றினார். இது ஒரு அகநூல். 99 பூக்கள் குறித்துக் கூறும்
நூல் குறிஞ்சிப்பாட்டு ஆகும் அத்துடன் 12 ஆண்டுகளுக்கு ஒரு
முறை பூக்கும் மலர் குறிஞ்சி மலர் ஆகும்.
* பட்டினப்பாலையை இயற்றியவர்
கடியலூர் உருட்திரங்கண்ணனார். பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினத்தைக்
குறிக்கும் இந்நகருக்கு பூம்புகார், புகார் என்று வேறு
பெயர்களும் உண்டு.
* புகார் நகரத்தில் நடைபெற்ற
வணிகத்தைப் பற்றி பட்டினப்பாலை வரிவாக எடுத்தியம்புகிறது.
* மலைபடுகடாம் நூலை இயற்றியவர்
பெருங்கெளசிகனார். பண்டைய இசைக் கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல்
மலைபடும்கடாம்.
* பெண் கொலை புரிந்த நன்னன்
பற்றி மலைபடுகடாம் குறிப்பிடுகிறது.
* பத்துப்பாட்டில் அகநூலாக
இருந்தும் புறச் செய்திகளை மிகுதியாகக் கூறும் நூல் பட்டினப்பாலை.
* பண் பாடுவோன் பாணன், பாணன் மனைவி பாடினி, விறவி. பாணனிடன் சேர்ந்து
பாடுபவள் பாடினி. பாணனின் பாட்டுக்கு ஆடுபவள் விறலி. ஆடும் ஆண்கள் கூத்தர்கள்.
வேடந்தாங்கி நடிப்போர் பொருநன்.
சங்கம் மருவிய கால செய்திகள்
* சங்கம் மருவிய கால
இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நீதிநூல்கள்
ஆகியவை.
* சங்கம் மருவிய காலத்தில்
தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் களப்பிரர்கள் ஆவர்.
* சங்கம் மருவிய கால
இலக்கியத்திற்கு இருண்ட கால இலக்கியம் என்றும் பெயர் உண்டு.
* சமண சமயமும், பெளத்த சமயமும் மேலோங்கி நின்ற காலம் இது.
* பதினெண் கீழ்கணக்கு நூல்கள்
இக்காலத்தில் தோன்றியவையே.
* வேளாண் வேதம், நாலடி நானூறு, நாலடி என பல்வேறு பெயர்களில்
வழங்கப்படும் நூல் இது.
* பாண்டிய நாட்டு சமண
முனிவர்களால் இயற்றப்பட்ட நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார்.
* பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
* நாலடியாரை ஜி.யு.போப்
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
* ஆலும்வேலும் பல்லுக்கு உறுதி,
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி இதில் நாலும் என்ற சொல்
நாலடியாரையும், இரண்டும் என்ற சொல் திருக்குறளையும்
குறிப்பதாகும்.
* கல்வி கரையில, கற்பவர் நாள் சில - நாலடியார்.
* நான்மணிக் கடிகையின் ஆசிரியர்
விளம்பி நாகனார். கடிகை என்றால் பகுதி (துண்டு) ென்று பொருள். ஆபரணம் என்றும்
பொருள் வழஹ்கப்படும்.
* இன்னா நாற்பது நூலின் ஆசிரியர்
கபிலர். இது துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும் நூலாகும்.
* இனியவை நாற்பது நூலை இயற்றியவர்
பூதஞ்சேந்தனார்.
* கார் நாற்பது நூலின் ஆசிரியர்
மதுரைக் கண்ணன் கூத்தனார். இது ஒரு அக நூல். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரு
திணையை (முல்லை) மட்டும் பாடிய நூல் கார் நாற்பது.
* பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களில் புறப்பொருள் பற்றிக் கூறும் ஒரே நூல் களவழி நாற்பது. இதன் ஆசிரியர்
பொய்கையார். கார்த்திகை திருவிழா பற்றி இந்நூல் சிறப்பித்துக் கூறுகிறது.
* கலிங்கத்துப் பரணி போன்ற
பிற்கால நூல்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய நூல் களவழி நாற்பது.
* ஐந்திணை எழுது நூலின் ஆசிரியர்
மூவாதியார்.
* திணைமொழி ஐம்பது நூலின் ஆசிரியர்
கண்ணன் சேந்தனார்.
* திணைமாலை நூற்றைம்பது நூலின்
ஆசிரியர் கணிமேதாவியார். இவர் ஏலாதி என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
* மருந்தின் பெயரால் பெயர் பெற்ற
நூல் திரகடுகம். திரி என்றால் மூன்று, கடுகம் என்றால்
காரமுடையது என்று பொருள். அவை சுக்கு, மிளகு, திப்பிலி ஆசிரியர் நல்லாதனார்.
* ஒழுக்கங்களை அடுக்கிக் கூறும்
நூல் ஆசாரக்கோவை ஆசிரயர் பெருவாயில் முள்ளியார்.
* பழமொழி நானூறு நூலை
இயற்றியவர் முன்றுரை அரையனார். தொல்காப்பியர் பழமொழியை முதுசொல் என்று
குறிப்பிடுகிறார்.
* கற்றலின் கேட்டலே மன்று,
குன்றின் மேல் இட்ட விளக்கு, தனிமரம் காடாதல்
இல், திங்களை நாய்க் குரைத்தற்று, நிறை
குடம் நீர்ட்ததும்பல் இல், நுணலும் தன் வாயால் கெடும்,
பாம்பின் கால் பாம்பறியும் ஆகிய மேற்கோள்கள் பழமொழி நானூறு நூலில்
இடம் பெருகின்றன.
* சிரிபஞ்சமூலம் நூலின் ஆசிரியர்
காரியாசான் ஐந்து வேர்கள் குறித்த மருத்துவம் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.
* முதுமொழிக்காஞ்சி நூலின்
ஆசிரியர் கூடலூர் கிழார். இது நிலையாமையைப் பாடும் நூலாகும்.
* இன்னிலை நூலின் ஆசிரியர்
பொய்கையார் ஆவார். கைந்நிலை நூலின் ஆசிரியர் புல்லங்காடனார்.
* பதிபெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் நீதி நூல்களின் எண்ணிக்கை 12.
திருக்குறள்
* முப்பால் எனப்படும்
திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
* உத்தரவேதம், செய்வநூல், பெய்யாமொழி, வாயுறை
வாழ்த்து, தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், திருவள்ளுவம் ஆகிய வேறு
பெயர்களும் இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
* திருக்குறளை இயற்றியவர்
திருவள்ளூவர்.
* வள்ளுவநாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர்,
நான்முகன், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில்
புலவன் போன்ற வேறு பெயர்களும் இவருக்கு வழங்கப்படுகிறது.
* திருக்குறளின் மொத்த
அதிகாரங்கள் 133. மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 1330,
அனைத்தும் குறள் வெண்பாக்கள்.
* அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், பொருட்பால் 70 அதிகாரங்களையும், காமத்துப்பால் 25 அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
* பதினெண் காழ்க்கணக்கு
நூல்களில் அதிக அறங்களைச் சொல்லும் நூல் திருக்குறள்.
* பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.
* பதினெண் காழ்க்கணக்கு
நூல்களுள் செய்யுளார்(பாவால்) பெயர் பெற்ற ஒரே நூல் திருக்குறள்.
* பதினெண் கீழ்க்கணக்கு
நூல்களுள் குறள் வெண்பாவால் ஆன ஒரே நூல் திருக்குறள்.
* இன்னூல் அ கரத்தில் தொடங்கி ன
கரத்தில் முடிகிறது.
* திருக்குறளின் சிறப்பை
எடுத்துக்கூறும் நூல் திருவள்ளுவமாலை.
* திருக்குறளுக்கு பரிமேலழகர்
உரை மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது.
* திருக்குறளை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப்.
* அறத்தான் வருவதேன் இன்பம்,
பெண்ணிற் பெருந்தக்க யாவுள, முயற்சி
திருவினையாக்கும், இடுக்கண் வருங்கால் நகுக, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று - திருக்குறளில் இடம் பெறும் முக்கிய
மேற்கோள்கள்.
சிலப்பதிகாரம்
* சிலம்பு+அதிகாரம் என்பதே
சிலப்பதிகாரம். ிதன் ஆசிரியர் இளங்கோவடிகள். சேரன் செங்குட்டுவனின் தம்பியே
இளங்கோவடிகள்.
* சிலப்பதிகாரம் மூன்று
காண்டங்களையும், முப்பது காதைகளையும் உடையது. புகார் காண்டம்,
மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் ஆகியன.
* சிலப்பதிகாரத்தின் தலைவன்
கோவலன், தலைவி கண்ணகி. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள்
மணிமேகலை.
* மதுரையின் காவல் தெய்வம்
மதுராபதி. கண்ணகிக்குக் கோயில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்.
* இளங்கோவடிகளுக்கு கண்ணகியின்
வரலாற்றைக் கூறியவர் சீத்தலைச் சாத்தனார்.
* மழை வேண்டி எடுக்கப்படும் விழா
இந்திர விழா. இந்திர விழா குறித்து சிலப்பதிகாரமும், மணிமேகலையும்
கூறுகின்றன.
* கண்ணகியின் கால் சிலம்பில்
இருந்தது மாணிக்க பரல்கள், கோப்பெருந்தேவியின்
காற்சிலம்பில் காணப்பட்டவை முத்துப்பரல்கள்.
* ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
- சிலப்பதிகாரம்.
* அரசியல் பிழைத்தோர்க்கு
அறங்கூற்றாகும் - சிலப்பதிகாரம்.
* உரைசால் பத்தினிக்கு
உயர்ந்தோர் ஏத்துவர் - சிலப்பதிகாரம்.
* நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்
என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு - பாரதியார்.
* யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே
பிறந்ததில்லை - பாரதியார்.
* சிலப்பிதிகாரத்திற்கு சிறந்த
உரை எழுதியவர் - அடியார்க்கு நல்லார்.
* முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், நாடக்க் காப்பியம், தேசியக் காப்பியம் ன வேறு பெயர்களாலும் சிலப்பதிகாரம் வழங்கப்படுகிறது.
மணிமேகலை
* இதன் ஆசிரியர் சீத்தலைச்
சாத்தனார். தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ்ப் புலவர் என்றும்
இவர் அழைக்கப்படுகிறார்.
* மணிமேகலைத் துறவு என்றும்
இந்நூல் வழங்கப்படுகிறது. இது ஒரு பெளத்த காப்பியம்.
* தமிழின் இரண்டாவது காப்பிய
நூல் மணிமேகலை.
* கோவலனுக்கும் மாதவிக்கும்
பிறந்த மணிமேகலை என்னும் பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்.
* மணிமேகலைக்கு முதன் முதலாக
அமுதசுரபியல் பிசிசையிட்டவள் ஆதிரை.
* மணிமேகலை பிறந்த ஊர்
பூம்புகார். மறைந்த ஊர் காஞ்சிபுரம்.
* இரட்டைக் காப்பியங்களில்
கிளைக்கதைகள் மிகுந்த நூல் மணிமேகலை.
சீவக சிந்தாமணி
* இதன் ஆசிரியர் திருத்தக்க
தேவர். விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி.
* சீவக சிந்தாமணி 13 இலம்பகங்களைக் கொண்டது. மண நூல், காமநூல், முக்தி நூல் என வேறு பெயர்களும் இந்நூலுக்கு வழங்கப்படுகிறது. இது ஒரு
சமணக் காப்பியம்.
* காப்பியத் தலைவன் சீவகன்.
ஜி.யு.போப் சீவக சிந்தாமணியை இலியட் மற்றும் ஒடிசி ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.
* இந்நூலின் ஆசிரியர் தமிழ்க்
கவிஞ்ர்களின் அரசன் என்று ஜி.யு.போப்பினால் புகழப்பட்டுள்ளார்.
காப்பியங்கள் சார்ந்த
செய்திகள்
* காப்பியம் பெருங்காப்பியம்,
சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.
* அறம், பொருள்,
இன்பம், வீடு என்ற நாற்பொருளையும் கூறுவது
ஐம்பெருங்காப்பியம். சிலப்பதிகாரம் (இளங்கோவடிகள்), மணிமேகலை
(சீத்தலைச்சாத்தனார்), சீவக சிந்தாமணி (திருத்தக்க தேவர்),
வளையாபதி, குண்டலகேசி (நாக்குத்தனார்) ஆகியன.
* சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படும்.
* சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமண
காப்பியங்கள்.
* மணிமேகலை, குண்டலகேசி ஆகிய இரண்டும் பெளத்த காப்பியங்கள்.
* ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அனைத்தும் சமணக் காப்பியங்களே ஆகும். நாக குமார காவியம், உதயண
குமார காவியம், யாசோதர காவியம், நீலகேசி,
சூளாமணி (தோலாமொழித் தேவர்) ஆகியன.
* குண்டலகேசிக்கு எதிராக
இயற்றப்பட்ட நூல் நீலகேசி. குண்டகேசியின் ஆசிரியர் நாதகுத்தனார். கலைஞர் கருணாநிதி
அவர்களால் மந்திரிகுமாரி என்ற திரைப்படமாக குண்டலகேசி நூல் ஆக்கப்பட்டுள்ளது.
* பெருங்கதையின் ஆசிரியர்
கொங்குவேள் ஆவார். உதயணன் வரலாற்றை முதலில் தமிழில் கூறிய நூல் பெருங்கதை ஆகும்.