#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday, 23 September 2016

உரிச்சொல்



1.பல வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தி வரும். (பண்பு - குணம்)
2.பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும்.
3.
ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்துவதாகவும், ஒருசொல் பல பொருளை உணர்த்துவதாகவும் இருக்கும்.
4.செய்யுளுக்கு உரியதாய் வரும்.
மேலே காட்டியபடி உரிச்சொல்,
1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்
2. பல குணம் தழுவிய உரிச்சொல்
என இரண்டு வகைப்படும்.
1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்
ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்பது, ஒரு பொருள்தரும் பல சொற்களைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டு
சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள்மிகுதி என்ற ஒரே பொருள் தரும்.
எனவே இவற்றை ஒரு குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.
2. பல குணம் தழுவிய உரிச்சொல்
பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைப் பல குணம் தழுவிய உரிச்சொல் என்று கூறுவர்.
எடுத்துக்காட்டு
கடி என்ற சொல் காப்பு, கூர்மை, மிகுதி, விரைவு, அச்சம், சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும்.
எனவே இதைப் பல குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.