#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Friday, 23 September 2016

இடைச்சொல்


தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும். இடைச்சொற்கள் தனித்துப் பொருள் தருவதில்லை.
இடைச் சொற்கள் எட்டு வகைப்படும்.
1. வேற்றுமை உருபுகள்
முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு. அவை,
இரண்டாம் வேற்றுமை-
மூன்றாம் வேற்றுமை-ஆல்
நான்காம் வேற்றுமை-கு
ஐந்தாம் வேற்றுமை-இன்
ஆறாம் வேற்றுமை-அது
ஏழாம் வேற்றுமை-கண்
என அமைந்துள்ளன.
2. காலம் காட்டும் இடைநிலைகளும் விகுதிகளும்.
வினைச் சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச் சொற்கள் ஆகும். கிறு, கின்று, ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள். அன், ஆன் முதலியவை விகுதிகள்.
3. உவம உருபுகள்
உவமைத் தொடர்களில் வரும் உவம உருபுகள்.
தாமரை போல் மலர்ந்த முகம். 
இதில் போல் என்பது உவம உருபு
4. சாரியைகள்
சந்தி இலக்கணத்தில் வரும் சாரியைகள்.
ஆல்+அம்+காடு = ஆலங்காடு
என்பதில் அம் சாரியை ஆகும்.
5. தத்தம் பொருளை உணர்த்தி வருபவை
ஏ, ஓ, உம் முதலிய இடைச் சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை.
அவனே கொண்டான்-
அவனோ கொண்டான்-
அவனும் வந்தான்-உம்
6. இசைநிறை
ஏ, ஒடு முதலிய இடைச் சொற்கள் இசைநிறையாக வரும்.
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ-
வளொடு-ஒடு
7. அசைநிலை
மன், மற்று, கொல் ஆகிய இடைச் சொற்கள் அசைநிலையாக வருபவை.
ஒப்பர்மன்-மன்
மற்றுஎன்-மற்று
ஆய்மயில்கொல்-கொல்
8. குறிப்பால் பொருள் உணர்த்துபவை
பொள்ளென, கதும்என, சரேல்என இவற்றில் வரும் என என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும். மேலே காட்டியவாறு இடைச்சொல் எட்டு வகைகளில் அமைந்துள்ளது.