Friday, 23 September 2016
எச்ச வினை
ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! ‘வந்தான்’ - ‘வந்து’ - ‘வந்த’ இம்மூன்று
|
‘வந்தான்’ என்பது, வினை, முற்றுப்பெற்றதை உணர்த்துகிறது. எனவே, இது வினைமுற்று..
|
‘வந்து’, ‘வந்த’ என்பன, முற்றுப்பெறாமல் உள்ளன. இவ்வாறு, பொருள் முடிவு தராமல் எஞ்சி நிற்பது எச்சம் - Participles or Infinitives எனப்படும். இவை, வேறு சொற்களைக் கொண்டு முடியும்.
|
திணை, பால், எண், இடம் ஆகிய விகுதிகளைப் பெறாமல், எச்ச விகுதிகளைப் பெற்றுவரும் வினைகள் எச்சவினை எனப்படும்.
|
வந்த, வருகின்ற, வரும்.
வர, போக, இருக்க. வந்து, போய், இருந்து. வந்தால், போனால், இருந்தால். |
போன்ற அமைப்பில் வரும் வினைகள் எச்சவினைகளாகும். இதனைப்
|
1. பெயரெச்சம், 2. வினையெச்சம் என இரண்டாகப் பகுக்கலாம்.
|
பெயரெச்சம்
|
‘வந்த’ என்பது சிறுவன், நாய் என ஏதேனும் ஒரு பெயரைக் கொண்டு பொருள் முடிவு பெறும். இவ்வாறு ஒரு பெயரைக் கொண்டு, முடியும் எச்சம் பெயரெச்சம் - Adjectival Participle எனப்படும்.
|
செய்த, செய்கின்ற, செய்யும் என்னும் அமைப்பினைக் கொண்டு இது வரும்.
|
செய்த வேலை, செய்கின்ற வேலை, செய்யும் தொழில்.
|
வினையெச்சம்
|
‘வந்து’ என்பது, சென்றாள், படித்தான், பார்த்தது என, வேறு வினையைப் பெற்றுப் பொருள் முடிவு பெறும். இவ்வாறு, வினையைக் கொண்டு பொருள் முடிவைப் பெறும் எச்சம் வினையெச்சம் - Adverbial Participle எனப்படும்.
|
1. செய்து, 2. செய்ய, 3. செய்தால் என்னும் அமைப்பைக் கொண்ட எச்ச வினைகளை வினை எச்சம் என்பர்.
|
1. செய்ய வேண்டும், தரச் சொன்னேன், போக விரும்பினேன்.
2. செய்து முடித்தேன், வந்து தருகிறேன், போய்ப் பார்க்கிறேன். 3. செய்தால் தருவேன், போனால் வரமாட்டாய், இருந்தால் பார்க்கலாம். |