Monday, 19 September 2016
நாலடியார்
Nellai pasanga
07:00
நாலடியாரின் உருவம்:
- ஆசிரியர்
= சமணமுனிவர்கள்
- தொகுத்தவர்
= பதுமனார்
- பாடல்கள்
= 400
- பொருள்
= அறம்
- பா வகை
= வெண்பா
பெயர்க்காரணம்:
- நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால்நாலடி நானூறு என்றும்
நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது
வேறு பெயர்கள்:
- நாலடி
- நாலடி நானூறு
- வேளாண் வேதம்
- திருக்குறளின் விளக்கம்
நூல் பகுப்பு:
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
- அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
- பொருட்பால்
= 24 அதிகாரங்கள்
- இன்பத்துப்பால்
= 3 அதிகாரங்கள்
நூலின் சிறப்பு:
- முப்பெரும் அற நூல்கள் = 1) திருக்குறள் 2)நாலடியார் 3)பழமொழி நானூறு
- இந்நூலைஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- நூலின் பெருமையை கூறும் அடிகள்
ஆலும்வேலும்பல்லுக்கு உறுதி
நாலும்இரண்டும்சொல்லுக்கு உறுதி |
பழகு தமிழ் சொல்லருமைநாலிரண்டில்
|
பொதுவான குறிப்புகள்:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
- நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
- நூலைதொகுத்தவர் = பதுமனார்
- நூலைமுப்பாலாகபகுத்தவர் = தருமர்
- நூலிற்கு உரை கண்டவர் = தருமர், பதுமனார்
- முத்தரையர் பற்றி கூறுகிறதுஇந்நூல்
- நாலடியாரின்உரைகளைஉள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
முக்கிய அடிகள்:
- கல்வி கரையில; கற்பவர்நாள்சில
- ஆராய்ந்து அமைவுடையகற்பவே, நீர் ஒழியப்
பால்உண்குருகின் தெரிந்து - கல்வி அழகே அழகு