Sunday, 18 September 2016
களவழி நாற்பது
Nellai pasanga
23:41
களவழி நாற்பதின் உருவம்:
பெயர்க்காரணம்:
- களம் = போர்க்களம்.
- போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப்
பெயர் பெற்றது.
- இதனை தொல்காப்பியம்,
ஏரோர் களவழி அன்றிக்
களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்
|
வேறு பெயர்:
- பரணி நூலின் தோற்றுவாய்
பொதுவான குறிப்புகள்:
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
- சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் =
போர்ப்புறம்(கழுமலம்)
- சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் = குடவாயில் கோட்டம்
- சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
- நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம்
தெரிவித்தான்.
- ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி
உயிர் விட்டான்.
- சேரமான் புறநானூற்றில் பாடிய பாடல்,
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத் தாம்இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ்வுலகத் தானே |
- இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
- களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது
தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.
முக்கிய அடிகள்:
- கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு
- வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்
- கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
- சினமால் பொறுத்த களத்து