Sunday, 18 September 2016
ஐஞ்சிறுகாப்பியங்கள்
Nellai pasanga
23:31
- ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக்காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள் இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற வழக்கத்தைஏற்படுத்தியவர் =
சி.வை.தாமோதரம்பிள்ளை
- நாககுமார காவியம் = ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- உதயனகுமார காவியம் = ஆசிரியர்பெயர்தெரியவில்லை
- யசோதர காவியம் = வெண்ணாவலூர்உடையார்வேள்
- நீலகேசி
= ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- சூளாமணி
= தோலாமொழித்தேவர்
ஐஞ்சிறுகாப்பியங்கள் அட்டவணை:
நூல்
|
சமயம்
|
பாவகை
|
ஆசிரியர்
|
அமைப்பு
|
நாககுமார காவியம்
|
சமணம்
|
விருத்தம்
|
|
5 சருக்கம், 170 பாடல்
|
உதயனகுமார
காவியம்
|
சமணம்
|
விருத்தம்
|
|
6 காண்டம், 369 பாடல்
|
யசோதர காவியம்
|
சமணம்
|
விருத்தம்
|
வெண்ணாவலூர்
உடையார் வேள்
|
5 சருக்கம், 320 பாடல்
|
நீலகேசி
|
சமணம்
|
விருத்தம்
|
|
10 சருக்கம், 894 பாடல்
|
சூளாமணி
|
சமணம்
|
விருத்தம்
|
தோலாமொழித்தேவர்
|
12 சருக்கம், 2330 விருதப்பாக்கள்
|
நாககுமார காவியம்
நாககுமாரகாவியத்தின் உருவம்:
- ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
- காலம் = கி.பி.16ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 170
- சருக்கம் = 5
- பாவகை = விருத்தப்பா
- சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
- கதைத் தலைவன் நாககுமாரன்பற்றிக்கூறுவதால் நூல் இப்பெயர் பெற்றது.
வேறு பெயர்:
- நாகபஞ்சமி கதை
பொதுவான குறிப்புகள்:
- நாகபஞ்சமிநோன்பின்சிறப்பைக் கூறும் நூல்.
- மனதையும்போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
- 519 பெண்களை மணக்கிறான் தலைவன்
- இந்நூலை “சொத்தை நூல்” என்கிறார் மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
- அரனின்றிப்பின்னைஒன்றுமுயிர்க்குஅரணில்லை
என்றும்
மறமின்றிஉயிர்க்குஇடர்செய்மற்றொன்றும்இல்லைஎன்றும்
திறமிகு உணர்ந்து தேறித்தீக்கதிப் பிறவிக்கு அஞ்சி
மறம் இதை விட்டு அறத்தில்வாழுமின்உலகத்தாரே
உதயணகுமார காவியம்
உதயனகுமார காவியத்தின் உருவம்:
- ஆசிரியர் = பெயர் தெரியவில்லை
- காலம் = கி.பி.15ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் = 369
- காண்டம்
= 6
காண்டங்கள்:
- உஞ்சைக் காண்டம்
- இலாவண காண்டம்
- மகத காண்டம்
- வத்தவ காண்டம்
- நரவாகன காண்டம்
- துறவுக் காண்டம்
வேறு பெயர்:
- உதயணன் கதை
பொதுவான குறிப்பு:
- இந்நூலின்மூலநூல் = பெருங்கதை
- கதைத்தலைவன் = உதயணன்
- உதயணனை “விச்சை வீரன்” என்றும் கூறுவர்.
- உதயணன்யாழின் பெயர் = கோடபதி
- “பெயர் தான் காவியம், ஆனால் காவியம் என்பது இம்மியும் இல்லை”
என்பார்
மது.ச.விமலானந்தம்
மேற்கோள்:
- வீணை நற்கிழத்தி நீ, வித்தக உருவி நீ
நாணின் பாவை தானும் நீ, நலன்திகழ்மணியும் நீ
காண என்றன்முன்பாய்க்காரிகையே வந்து, நீ
தோணி முகம் கட்டு எனச்சொல்லியேபுலம்புவான்
யசோதர காவியம்
யசோதர காவியத்தின் உருவம்:
- ஆசிரியர் = வெண்ணாவலூர்
உடையார் வேள்
- காலம் = 13ஆம் நூற்றாண்டு
- பாடல்கள்
= 320
- சருக்கங்கள் =
5
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
பொதுவான குறிப்புகள்:
- வடமொழியில்எழுதப்பட்டஉத்திரபுராணத்தில் இருந்து இதன் கதை
எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தார் எழுதிய யசோதரசரிதத்தின் தழுவல் என்றும் கூறுவர்.
- “மாளவ பஞ்சம்” என்னும் கருநாடக இசை பற்றி
கூறப்பட்டுள்ளது.
மேற்கோள்:
- யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்
- தம்மைக்கொல்லின்வான்உயிர்இன்பமே
அல்லால்வருநெறிதிரியும் அன்றி
ஊன்உயிர் இன்பம் எண்ணி எண்ணாமல்
மற்றொன்றும் இன்றி மானுடர்வாழ்வு மண்ணில்
மரித்திடும்இயல்பித்ரு அன்றோ
நீலகேசி
நீலகேசியின் உருவம்:
- ஆசிரியர் = பெயர்
தெரியவில்லை
- காலம் = 6ஆம் நூற்றாண்டு
- பாடல்கள் =
894
- சருக்கம்
= 10
- பாவகை
= விருத்தம்
- சமயம் = சமணம்
வேறு பெயர்:
- நீலகேசிதெருட்டு
- நீலம்(யாப்பருங்கலவிருத்தியுரை)
பெயர் காரணம்:
- நீலம் = கருமை, கேசம் = கூந்தல்
- கேசி = கூந்தலை உடையவள்
- நீலகேசி = கரிய கூந்தலை உடையவள்
பொதுவான குறிப்புகள்:
- நீலகேசி என்றால் கருத கூந்தலை உடையவள் என்று பொருள்
- இந்நூல் குண்டலகேசி என்னும் நூலிற்கு எதிராக எழுதப்பட்டது.
- நூலுக்கு உரை எழுதியவர் = திவாகரவாமன முனிவர்.
- இவரின் உரை “சமய திவாகரம்” எனப்படுகிறது.
மேற்கோள்:
- கோறல் பொய்த்தல்
கொடுங்களவு
நீங்கிப் பிறர் மனைகண்மேல்
சேரல்இன்றிச்செலும்பொருள்மேல்
சென்ற சிந்தை வேட்கையினை
ஆறு கிற்பின் அமர் உலகம்
நுன்கண்கடியதாம் என்றாள்
சூளாமணி
சூளாமணியின் உருவம்:
- ஆசிரியர் = தோலாமொழித் தேவர்
- காலம் = கி.பி.பத்தாம்நூற்றாண்டு
- பாடல்கள் = 2330
- சருக்கம் = 12
- பாவகை = விருத்தம்
- சமயம் = சமணம்
பெயர்க்காரணம்:
- மிக்க ஒளியையும்சிறப்பினையும் உடையது சூளாமணி.
ஆற்றல்களும்சிறப்புகளும் கொண்டு திவிட்டனும்விசயனும் சூளாமணி போல்
ஒளிர்ந்தமையால் நூல் இப்பெயர் பெற்றது.
பொதுவான குறிப்புகள்:
- நூல் ஆசிரியர் தோலாமொழித்தேவரின்இயற் பெயர் வர்த்தமான தேவர்.
- இந்நூலின் முதல் நூல் = வடமொழியில் உள்ள ஆருகதமாபுராணம்
- சூளாமணியின் கதை நாயகன் திவிட்டன்
- நூலை முதலில் பதிப்பித்தவர்சி.வை.தாமோதரம்பிள்ளை
- “விருதப்பாவைகையாள்வதில் இவர் சீவக சிந்தாமணி
ஆசிரியரையும்மிஞ்சிவிட்டார்” என்கிறார் மு.வரதராசனார்
- “சிந்தாமணியைவிடச்செப்பமானநடையை உடையது
சூளாமணி” என்று கி.வா.ஜகன்னாதன் கூறுகிறார்.
- “சிந்தாமணியிலும் கூட இத்தகைய ஓடமும்இனிமையும்
இல்லை” என்கிறார் தெ.பொ.மீ
மேற்கோள்:
- ஆணை துரப்பஅரவு உரை
ஆழ்குழி
நானவிர்பற்றுபு நாளும் ஒருவன் ஓர்
தேனின்அழிதுளிநக்கும்திறத்தது
மானுடர் இன்பம் மதித்தனை கோல் நீ