#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Sunday, 18 September 2016

ஐங்குறுநூறு

ஐங்குறுநூற்றின் உருவம்:
  • திணை = அகத்திணை
  • பாவகை       = ஆசிரியப்பா
  • பாடல்கள்     = 500
  • பாடியோர்     = 5
  • அடி எல்லை    = 3-6
பெயர்க்காரணம்:
  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால்ஐங்குறுநூறுஎனப் பெயர் பெற்றது.
தொகுப்பு:
  • தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்
  • தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரல்இரும்பொறை
உரை, பதிப்பு:
  • முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்
  • முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
கடவுள் வாழ்த்து:
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடியபெருந்தேவனார்
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
நூல் பகுப்பு:
  • ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு தினைக்கும் நூறு நூறுபாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நூறும் பத்து பத்துபாடல்கள்எனப் பத்து பிரிவுகளாகபகுக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு பத்து பாடல்களின்தலைப்பும் “பத்து” என முடிகிறது.
  • குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.
பாடியோர்:
  • இந்நூலைஇயற்றியவர்கள்பற்றிப்பழம்பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
மருதமோரம்போகி, நெய்தலம்மூவன்
கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலை ஓதலாந்தைபனிமுல்லைபேயனே
நூலை ஓது ஐங்குறு நூறு
  • மருதம் திணை பாடல்கள்பாடியவர்   = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள்பாடியவர்  = அம்மூவன்
  • குறிஞ்சி திணை பாடல்கள்பாடியவர்  = கபிலர்
  • பாலை திணை பாடல்கள்பாடியவர்    = ஓதலாந்தை
  • முல்லை திணை பாடல்கள்பாடியவர்  = பேயனார்
நூலில் கூறப்படும் அரசர்கள்:
கடுமான்
குட்டுவன்
ஆதன்
அவினி
கொற்கை கோமான்
மத்தி
நூலில் கூறப்படும் ஊர்கள்:
தொண்டி
தேனூர்
கழார்(காவிரி)
கொற்கை
கிடைக்காதவை:
  • ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில்129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால்498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பொதுவான குறிப்புகள்:
  • தொகை நூல்களில்மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல் இதுவே.
  • தாய்முகம்நோக்கியேஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும்கூறப்பட்டுள்ளது.
  • அம்மூவனார்இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
  • சங்க இலக்கியத்தில்உள்ளுறையும்இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
  • இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவிவந்துள்ளது.
முக்கிய அடிகள்:
  • அன்னாய் வாழி வேண்டன்னைநம்படப்பைத்
    தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
    உவலைக் கூவல் கீழ
    மானுண்டு எஞ்சிய கலுழிநீரே  - (கபிலர்)
  • நெற்பலபொலிகபொன்பெரிது சிறக்க
    விளைகவயலே  வருக இரவலர்
    என வேட்டோய்யாயே  - (ஓரம்போகியார்)
  • பூத்தகரும்பில் காய்ந்த நெல்லிற்
    கழனி யூரன்
  • வாழி ஆதன் வாழி அவினி