Sunday, 18 September 2016
பெரியபுராணம்
Nellai pasanga
23:39
ஆசிரியர் குறிப்பு:
- இயற் பெயர் = அருண்மொழித்தேவர்
- பிறந்த ஊர் = குன்றத்தூர்
நூல் குறிப்பு;
- சேக்கிழார் தம் நூலிற்குஇட்ட பெயர் = திருத்தொண்டர் புராணம்
- இதனை “திருத்தொண்டர்மாக்கதை” என்றும் அழைக்கப்படுகிறது
- “சைவசமயத்தின் சொத்து” எனப்போற்றப்படும் நூல்
இது.
- “சைவஉலகின் விளக்கு” எனப்போற்றப்படுகிறது
- “எடுக்கும் மாக்கதை” என நூல்
ஆசிரியரேகுறிப்பிடுகிறார்.
வேறு பெயர்கள்:
- உத்தம சோழப்பல்லவன்
- தொண்டர் சீர் பரவுவார்
- தெய்வப்புலவர்
- இராமதேவர்
- மாதேவடிகள்
குறிப்பு:
- இவர் அநபாயசோழனிடம்அமைச்சராக இருந்தவர்.
சுந்தரரின்
திருத்தொண்டத்தொகை
|
முதல் நூல்
|
நம்பியாடார்நம்பியின்திருத்தொண்டத்திருவந்தாதி
|
வழி நூல்
|
சேக்கிழாரின்
பெரியபுராணம்
|
சார்பு நூல்
|
- பெரியபுராணத்தில்2 காண்டம் 13
சருக்கம் உள்ளது.
- முதல் சருக்கம் = திருமலைச்சருக்கம்
- இறுதி சருக்கம் = வெள்ளையானைச்சருக்கம்
- நூலில்63
நாயன்மார்களையும்9 தொகை அடியார்களையும் கூறியுள்ளார்.
- பெரியபுராணத்தின் தலைவன் = சுந்தரர்
- நூலில் பெரும் பகுதி திருஞானசம்பதர் பற்றிய குறிப்பு உள்ளது.
- சோழனின் மனதை சீவக சிந்தாமணி நூலில் இருந்து சைவத்தின் பக்கம்
திருப்ப சேக்கிழார் பெரியபுராணத்தைபடைத்தார்.
சிறப்பு;
- “இறைவனேசேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடி
எடுத்து கொடுக்க பாடினார்.
- தமிழின் முதல் களஆய்வு நூல் பெரியபுராணம்
- தமிழின் இரண்டாவது தேசியக் காப்பியம்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
படைத்த “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” நூலில் “பக்திச் சுவை
நனிசொட்டச்சொட்டப்பாடியகவிவலவ” எனச்சிறப்பிக்கிறார்.
- “சேக்கிழார் புராணம்” பாடியவர் = உமாபதி சிவம்
- சிவஞானமுனிகள், “எங்கள் பாக்கியப்பயனாகியகுன்றை வாழ் சேக்கிழான் அடி
சென்னிஇருத்துவாம்” என கூறுகிறார்.
- பெரியபுராணத்தை உலக பொது நூல் என்கிராட்தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்