Wednesday, 21 September 2016
பதவியல்
தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும். ஒட்டுநிலை
மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி, இடைநிலை, சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும். (இவற்றைப் பற்றி
விரிவாகப் பின்னர் படிக்கலாம்) தமிழில் முன் ஒட்டுகள் இல்லை; பின் ஒட்டுகளே உள்ளன. வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள்
உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக
போ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும். இதனுடன் வ் என்ற எதிர் கால இடைநிலையும், ஆன் என்ற ஆண்பால் ஒருமை
வினைமுற்று விகுதியும் இணைந்து,
போ
+ வ் + ஆன் = போவான்
என்று
ஒரு சொல் உருவாகிறது. இலக்கணத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பகுதிக்குப் பதவியல் என்று பெயர்.