Wednesday, 21 September 2016
ஆய்தக்குறுக்கம்
இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய மெய் எழுத்துகள்
வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள்
ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.
அல்
|
+
|
திணை
|
=
|
அஃறிணை
|
முள்
|
+
|
தீது
|
=
|
முஃடீது
|
இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்.
இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.
ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
(நன்னூல் 97)
(பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத்
திரியும். அந்த ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும். )
• சார்பு எழுத்துகளுக்கு
மாத்திரை
சார்பு எழுத்துகள் எல்லாம் எப்படி
மாத்திரை பெறும் என்பதைப் பின்வரும் பட்டியல் காட்டும்.
உயிரளபெடை
|
மூன்று மாத்திரை
|
உயிர்மெய் நெடில்
|
இரண்டு மாத்திரை
|
உயிர்மெய்க் குறில்
|
ஒரு மாத்திரை
|
ஒற்றளபெடை
|
ஒரு மாத்திரை
|
ஐகாரக்குறுக்கம்,
|
ஒரு மாத்திரை
|
ஒளகாரக்குறுக்கம்
|
ஒரு மாத்திரை
|
குற்றியலுகரம், குற்றியலிகரம்
|
அரை மாத்திரை
|
ஆய்தம்
|
அரை மாத்திரை
|
மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
|
கால் மாத்திரை
|