Wednesday, 21 September 2016
இயல்பு புணர்ச்சி
நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களிலும் எவ்வித எழுத்து மாற்றமும் நிகழாமல் இயல்பாக இருப்பதுஇயல்பு புணர்ச்சி எனப்படும். அஃதாவது அடுத்துக் கூறப்படும் விகாரப் புணர்ச்சிக்கு உரிய விகார வகைகள் எதனையும் அடையாமல் இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி ஆகும். இதனை நன்னூலார் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகின்றார்.
விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே - (நன்னூல், 153)
(மேவலது - அடையாதது.)
சான்று:
தாமரை + பூத்தது = தாமரை பூத்தது
பொன் + மலை = பொன் மலை
கதவு + திறந்தது = கதவு திறந்தது