Wednesday, 21 September 2016
விகாரப் புணர்ச்சி
நிலைமொழி வருமொழியுடன் புணரும்பொழுது, அவ்விரு சொற்களில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏதேனும் எழுத்து மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சியை நன்னூலார் தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம் என மூன்று வகைப்படுத்திக் காட்டுகிறார். இம்மூவகை விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் வரும் சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என்று அவர் கூறுகிறார்.
தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும் - (நன்னூல், 154)
மூன்றும் மொழிமூ இடத்தும் இயலும் - (நன்னூல், 154)
(மொழி = சொல்; மூ இடத்தும் = சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும்.)
இரு சொற்களுக்கு இடையில் எழுத்தோ, சாரியையோ தோன்றுவதுதோன்றல் விகாரம் எனப்படும்.
சான்று:
பூ+கொடி
|
= பூங்கொடி (ங் என்ற எழுத்துத் தோன்றியது)
|
யானை+கொம்பு
|
= யானைக் கொம்பு (க் என்ற எழுத்துத் தோன்றியது)
|
ஆ+பால்
|
= ஆவின் பால் (இன் என்ற சாரியை தோன்றியது)
|
இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து இன்னோர் எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) திரிதல் விகாரம் எனப்படும்.
சான்று:
பொன்+குடம் = பொற்குடம்
(நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது)
(நிலைமொழி இறுதி ன் என்பது ற் எனத் திரிந்துள்ளது)
முன்+நிலை = முன்னிலை
(வருமொழி முதல் ந் என்பது ன் எனத் திரிந்துள்ளது)
(வருமொழி முதல் ந் என்பது ன் எனத் திரிந்துள்ளது)
சில நேரங்களில் நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இன்னோர் எழுத்தாகத் திரிதல் உண்டு.
சான்று:
பொன்+தாமரை = பொற்றாமரை
(நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த்என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.)
(நிலைமொழி இறுதி ன் என்பதும், வருமொழி முதல் த்என்பதும் ற் எனத் திரிந்துள்ளன.)
இரு சொற்களில் ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மறைந்து போதல் கெடுதல் விகாரம் எனப்படும். (கெடுதல்-மறைதல்)
சான்று:
மரம் + நிழல் =மரநிழல்
(நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.)
(நிலை மொழி இறுதி ம் என்பது கெட்டது.)
மேலே கூறப்பட்ட மூன்று விகாரங்களும் நிலைமொழியாகவும், வருமொழியாகவும் அமையும் இரு சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய மூன்று இடங்களிலும் நிகழும் என நன்னூலார் குறிப்பிட்டுள்ளார்.
சான்று :
ஆறு + பத்து =அறுபது
இதில் நிலைமொழியின் முதலில் உள்ள ஆ என்னும் நெட்டெழுத்துஅ என்னும் குற்றெழுத்தாகத் திரிந்தது. வருமொழியின் இடையில் உள்ள த்என்ற மெய் கெட்டது.
இரு சொற்கள் சேர்ந்துவரும் ஒரு புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்றுவகை விகாரங்களில் ஒரே ஒரு விகாரம் மட்டும் அல்லாமல் இரண்டு விகாரமோ, மூன்று விகாரமோ கூட வரப்பெறும் என்கிறார் நன்னூலார்
ஒரு புணர்க்கு இரண்டும் மூன்றும் உறப்பெறுமே - (நன்னூல், 157)
(புணர் = புணர்ச்சி)
சான்று :
1. யானை + கொம்பு = யானைக் கொம்பு
இதில் தோன்றல் விகாரம் மட்டும் வந்தது.
2. மரம் + பெட்டி = மரப்பெட்டி
இதில் நிலைமொழியின் இறுதியில் உள்ள மகரமெய் கெட்டு, அங்கே வருமொழியின் முதலில் உள்ள எழுத்துக்கு ஏற்ப, பகர மெய் தோன்றியதால் கெடுதல், தோன்றல் என்னும் இரு விகாரங்கள் வந்தன.
3. பனை + காய் = பனங்காய்
இதில் நிலைமொழியாக வந்துள்ள பனை என்பதன் இறுதியில் உள்ள ஐகாரம் கெட்டு (கெடுதல் விகாரம்), இடையில் அம் என்ற சாரியை தோன்றி (தோன்றல் விகாரம்), அம் என்ற சாரியையில் உள்ள மகரமெய் ஙகர மெய்யாகத் திரிந்ததால். (திரிதல் விகாரம்) மூன்று விகாரங்களும் வந்தன.
பனை + காய் | |
பன் + காய்
|
(ஐ - கெடுதல்)
|
பன் + அம்+காய்
|
(அம் - தோன்றல்)
|
பன் + அங்+காய்
|
(ம் ங் எனத் திரிதல்)
|
= பனங்காய்
|