Sunday, 18 September 2016
திருமூலர்
Nellai pasanga
23:37
- இவரின் திருமந்திரம் பத்தாம்திருமுறையாகும்.
- திருமூலர் ஒரு சித்தர்.
- இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனூர்
- இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை
- திருவாவடுதுறைக்கு “நவகோடிசித்தபுரம்” என்ற பெயரும் உண்டு.
- திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் = திருமந்திர மாலை
- திருமந்திரத்திற்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரும் உண்டு.
- இந்நூலில்9
தந்திரங்களும், 232 அதிகாரங்களும் உள்ளது.
- முதல் சித்த நூல் திருமந்திரம்
- யோகநெறி கூறும் தமிழின் ஒரே நூல்
- “சைவ சித்தாந்தம்” என்னும் தொடர் முதலில்
திருமந்திரத்தில் தான் உள்ளது.
- இவர் நந்திதேவரின் அருள் பெற்றவர்.
- சைவசமயத்தின் முதல் நூல் இதுவே.
- நாயன்மார்களில் மூத்தவர் இவரே.
- திருமூலரின் பழைய பெயர் = சுந்தரன்
- நந்திதேவர்வழங்கிய பெயர் = நாதன்
மேற்கோள்:
- ஒன்றே குலம் ஒருவனே தேவன்
- நான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
- அகத்தில்கண்கொண்டுபார்ப்பதே ஆனந்தம்
- மரத்தை மறைத்ததுமாமத யானை
- அன்பே சிவம்
- உடம்பார்அழியின்உயிரார்அழிவார்
- உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
- படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்