Sunday, 18 September 2016
ஆண்டாள்
Nellai pasanga
23:19
குறிப்பு:
- பிறந்த ஊர் = ஸ்ரீவில்லிபுத்தூர்
- பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்
- இவர் பூமகள் அம்சமாகப்பிறந்தவர்
- இவர் துளசி வனத்தில்கண்டெடுக்கப்பட்டார்
- இவருக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் = கோதை
- இறைவனுக்கும்ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெற்ற இடம் = திருவரங்கம்
- இவரின் பாடல்களைப் “பள்ளமடை” என்றும், பிற ஆழ்வார்களின் பாடல்களை “மேட்டுமடை” என்றும் குறிப்பிடுவர்
திருப்பாவை:
- திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்றவர் = இராமானுஜர்
- நாலாயிரதிவ்வியப்பிரபந்தத்தொகுப்பில் மூன்றாவது
பிரபந்தமாகவைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
- பாவை என்பது சிற்றிலக்கியவகைகளுள் ஒன்று.
- பாவை என்பது இருமடியாகு பெயர்.
- திருப்பாவை பாக்கள் முப்பதும்வெண்டளையால் வந்த
எட்டடிநாற்சீர்கொச்சகக் கலிப்பா வகையைசார்ந்தவை.
- இவரின் திருப்பாவை, பாவை நூல்களில்காலத்தால்முற்பட்டது.
- திருப்பாவைக்கு ஆண்டாள் இட்ட பெயர் = சங்கத் தமிழ் மாலை முப்பது
சிறப்பு பெயர்:
- கோதை(பெரியாழ்வார் இட்ட பெயர்)
- சூடிக்கொடுத்தசுடர்க்கொடி
- நாச்சியார்
- ஆண்டாள்
படைப்புகள்:
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
மேற்கோள்:
- கற்பூரம் நாறுமோ!
கமலப்பூநாறுமோ?
திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ?
மறுப்பு ஒசித்தமாதவன்தன்வாய்ச்சுவையும்நாற்றமும்
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல் ஆழிவெண்சங்கே! - வாரணம் ஆயிரம் சூழ
வளஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று - மானிடவர்க்கு என்று
பேச்சுப்படின்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே - நாராயணனேநமக்கேபறைதருவான்