Monday, 19 September 2016
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
Nellai Pasanga
07:12
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
அறநூல்கள் - 11
அகநூல்கள் - 6
புறநூல் - 1
அறநூல்கள் - 11
நாலடியார் சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
இன்னா நாற்பது கபிலர்
இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
திரிகடுகம் நல்லாதனார்
ஆசாரக்கோவை பெருவாயின்முள்ளியார்
பழமொழி முன்றுரையரையனார்
சிறுபஞ்சமூலம் காரியாசன்
ஏலாதி கணிமேதாவியர்
திருக்குறள் திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி கூடலூர்கிழார்
புறநூல் -1
களவழி நாற்பது பொய்கையார்
அகநூல் - 6
ஐந்திணை ஐம்பது மாறன்பொறையனார்
ஐந்திணை எழுபது மூவாதையார்
திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்
கார் நாற்பது கண்ணன் கூத்தனார்
திணைமாலைநூற்றைம்பது கணிமேதாவியார்
ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை புல்லங்காடனார்
.
1.அறநூல்கள் விளக்கம்
1.நாலடியார்
திருக்குறளுக்கு அடுத்த
படியாகப்போற்றப்படும் நீதி நூலாகும்.இது‘நாலடி நானூறு’
எனவும் அழைக்கப்படுகிறது.
திருக்குறள் போலவே அறத்துப்பால், பொருட்பால்,
காமத்துப்பால் என மூவகைபிரிவுகளுடையது.
அறத்துப்பால்13.
பொருட்பால்24.
காமத்துப்பால்3
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்துள்ளார்.
நாலும்இரண்டும்சொல்லுக்குறுதி என்ற
பழமொழியில் வரும்
நாலும் என்பது நாலடியாரையும்இரண்டும்
என்பது திருக்குறளையும்குறிப்பதாகும்.
“செல்வம் சகடகால்போல் வரும்”
“கல்வி கரையிலகற்பவர்நாள்சில”
2.நான்மணிக்கடிகை
கடிகை என்பதற்கு “துண்டு” எனப்பொருள்படும்.
நான்கு மணிகளின்துண்டுகள் இணைந்த மாலைபோல
ஒவ்வொருபாடலிலும் மணி போன்று நான்கு கருத்துகளுடன்பாடப்பெற்றுள்ளதால் இதனை “நான்மணிக்கடிகை” என அழைக்கப்படுகிறது.
3. இன்னா நாற்பது
ஒவ்வொரு கருத்து முடிவிலும்“இன்னா” எனக் கூறுப்படுவதால்“இன்னாநாற்பது” என்றழைக்கப்படுகிறது.
“ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா”
“உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு
இன்னா”
4. இனியவை நாற்பது
இனிய பொருட்களை
பாடல்களில்தொகுத்துக்கூறியுள்ளமையால்இப்பெயரைப்பெற்றுள்ளது.
“ஊனினைத் தின்று ஊனினைப்பெருக்காமை
இனிது”
“மானம் அறிந்தபின்வாழாமை முன் இனிதே”
5. திரிகடுகம் (திரி + கடுகம்)
சுக்கு+மிளகு+திப்பிலிஇம்மூன்றினால்
செய்யப்பட்ட மருந்துக்கு“திரிகடுகம்” என்று பெயர்.
“காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்”
6. ஆசாரக் கோவை
ஆசாரம் என்பது ஒழுக்கம். கோவை என்பது
அடுக்கிக் கூறுதல். ஒழுக்க
நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய
வேண்டிய கடமைகளைப் பற்றியும்
குறிப்பிடுகிறது.
7. பழமொழி
பழமை + மொழி.இது பழமொழி நானூறு என்றழைக்கப்படுகிறது. நீதிக்
கருத்தை விளக்கிக் காட்டும் வகையில் அமைக்கப்பட்ட நூல். திருக்குறள், நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து போற்றத்தக்கபெருமையுடையது.
“பாம்பின் கால் பாம்பறியும்”
“கண்டதைக்கற்கபண்டியதனாவான்”
8. சிறுபஞ்ச மூலம்
மூலம் என்பது வேர். பஞ்சம் என்பது ஐந்து. சிறுவழுதுணை, நெருஞ்சி,
சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு
வேர்கள்நோயைப்போக்கி உடலுக்கு உறுதி தருவது போல இந்நூலில்கூறப்பட்டுள்ளது.
9. ஏலாதி
ஏலாதி என்பது மருத்துவப்பெயர்.ஏலம் +
இலவங்கம் + நாககேசரம்
சுக்கு + மிளகு + திப்பிலி ஆகியஆறுவகை
மருந்து கலவையே“ஏலாதி” ஆகும்.
10. திருக்குறள்
திரு+குறள்.
அரத்துப்பால்-38
பொருட்பால் - 70
காமத்துப்பால் - 25
133 அதிகாரங்கள்
1330குறள்களையும்9இயல்களையும் உடையது.
அறத்துப்பால் (4இயல்கள்)
பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
பொருட்பால்( 3இயல்கள்)
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
காமத்துப்பால்2இயல்கள்
களவியல், கற்பியல்
11.முதுமொழிக்காஞ்சி
கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே
சிறந்தது எனக் கூறுகிறது.
“ஆர்கலியுகத்துமக்கட்கெலாம்ஒதலில்சிறந்தன்று
இருக்கும்”
புறநூல் விளக்கம்
12.களவழி நாற்பது
ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறுவது களவழி. இந்நூல்
முழுவதும் யானைப் போர் பற்றியே அழகிய வீரக்கற்பனைகளைத் தருகிறது.
அகநூல்கள் விளக்கம்
13. கார் நாற்பது
அகப்பொருள் கூறும்
பதினெண்கீழ்க்கணக்குநூல்களில் சிறிய நூல். கார்
காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம்
பெற்றுள்ளன.
முல்லைத்திணைக்குரிய அகப்பொருள் இதில்
சித்தரிக்கப்படுகின்றது. முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள்அழகுறசொல்லப்பெற்றிருக்கின்றன.
14. ஐந்திணை ஐம்பது
ஆசிரியர் பொறையனார். அகத்திணைகளான முல்லை,
குறிஞ்சி, மருதம்,
பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும்திணைக்குப்பத்துப்பாடலாக50பாடல்கள்
இடம்பெற்றுள்ளன. இந்நூன் சிறந்த
செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும்கொண்டதாகும்.
“ஐந்திணைஐம்பதும்ஆர்வத்தின்ஓதாதார்
செந்தமிழ் சேராதார்”
என்று
இந்நூலின்சிறப்பைஉணர்ந்தபாயிரப்பாடல்கூறுகிறது.
15. ஐந்திணை எழுபது
ஆசிரியர் மூவாதியார். ஒவ்வாருதிணைக்கும்14பாடல்கள் வீதம் ஐந்து
திணைக்குமாக70 அமைந்துள்ளன. இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
16. திணைமாலைநூற்றைம்பது
ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன்
கணிமேதாவியார். இவரேஎழுதியவர். ஒவ்வொரு திணைக்கும்30பாடல்கள் வீதம் 150பாடல்கள்அமைந்துள்ளன.அகத்தினை
கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில்வடசொற்களும் சில கலந்து வரும்.கீழ்க்கணக்கிலுள்ள
அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூல்
ஆகும்.
17. கைந்நிலை(ஐந்திணை அறுபது)
ஆசிரியர் புல்லங்காடனார். இதில் 12 முதல் 60பாடல்கள் இடம்
பெற்றுள்ளன..இதிலும்வடசொற்கள் பல கலந்துள்ளன.
18. திணைமொழி ஐம்பது.
ஆசிரியர் கண்ணந்சேந்தனார்.
அகத்தினைஐந்திற்கும் தலைக்கு பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களை அமைந்த நூலாததலால்திணைமொழி ஐம்பது எனப் பெயர் பெற்றது.
இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.