#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday, 19 September 2016

பதிற்றுப்பத்து


  • சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
  • பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.
பதிற்றுப்பத்தின் உருவம்:
  • திணை                 = பாடாண் திணை (புறத்திணை)
  • பாவகை       = ஆசிரியப்பா
  • பாடல்கள்     = 100( கிடைத்தவை80)
  • புலவர்கள்     = 10(அறிந்த புலவர்8)
  • அடி எல்லை    = 8-57
பெயர் காரணம்:
  • பத்து + பத்து = பதிற்றுப்பத்து
  • பத்து + இன் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
  • பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று தொல்காப்பியம் வெளிப்படையாக கூறவில்லை. நன்னூல்கூறுகிறது.
வேறுபெயர்:
  • இரும்புக்கடலை
தொகுப்பு:
  • இந்நூலைதொகுத்தவர், தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
உரை:
  • பழைய உரை ஒன்று உள்ளது.
  • பழைய உரைக்குஉ.வே.சாவின்குறிப்புரை
பதிற்றுப்பத்தில்புலவர்களும்பரிசும்:
பத்துக்கள்
பாடிய புலவர்
அரசன்
பரிசு
முதல் பத்து

உதியஞ்சேரலாதன்

இரண்டாம் பத்து
குமட்டுர்கண்ணனார்
இமயவரம்பன்நெடுஞ்சேரலாதன்
இறையிலி நிலமாகஉம்பற்காடு, ஐநூறு ஊர்கள்
மூன்றாம் பத்து
பாலைக்கௌதமனார்
பல்யானைசெல்கெழுகுட்டுவன்
பத்து வேள்விகள் செய்ய உதவி, மனைவியுடன் விண்ணுலகம் புகச் செய்தான்
நான்காம் பத்து
காப்பியாற்றுக்காப்பியனார்
களங்காய்சென்னிநார்முடிச்சேரல்
நாற்பது நூறாயிரம் பொன், சேரநாட்டில் ஒரு பகுதி
ஐந்தாம் பத்து
பரணர்
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
உம்பற்காட்டு வருவாய், அரசன் மகா குட்டுவசேரல்
ஆறாம் பத்து
காக்கைப்பாடினியார்நச்சொள்ளையார்
ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
ஒன்பது துலாம் பொன், நூறாயிரம் பொற்காசுகள்
ஏழாம் பத்து
கபிலர்
செல்வக்கடுங்கோவாழியாதன்
நூறாயிரம் பொன், நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கு எட்டியதொலைவுப் பகுதி
எட்டாம் பத்து
அரிசில்கிழார்
தகடூர் எறிந்தபெருஞ்சேரல்இரும்பொறை
ஒன்பது நூறாயிரம் பொன், அரசுக்கட்டில்
ஒன்பதாம் பத்து
பெருங்குன்றூர்கிழார்
இளஞ்சேரல்இரும்பொறை
32000 பொன், ஊர், மனை, ஏர், பிற அருங்கலங்கள்பன்னூறாயிரம்
பத்தாம் பத்து

யானைகட்சேய்மாந்தரால்சேரல்இரும்பொறை

பொதுவான குறிப்புகள்:
  • இந்நூல்பாடாண் திணை என்னும் ஒரே தினைப்பாடலால் ஆனது.
  • இந்நூலின் முதல் பத்தும், இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை.
  • ஒவ்வொரு பாட்டின்முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
  • வழக்கின் இல்லாத பழஞ்சொற்களைமிகுதியாகப்பெற்றுள்ளதால்இந்நூல் “இரும்புக்கடலை” என அழைகப்படுகிறது.
  • பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில்ஆண்ட சேர வேந்தர்பரம்பரைச்செய்திகளைத் தெரிவிக்கிறது.
  • சங்க நூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.
  • பதிற்றுப்பத்தும்இசையோடுபாடப்பட்ட நூல்.(இசையோடுபரிபாடலும்பாடப்பட்டது)
  • நான்காம் பத்து அந்தாதி தொடையில்அமைந்துள்ளது.
  • பகைவரதுபெண்டிரின் கூந்தலை அறிந்து கயிறாகத்திரித்துயானைகளைக் கட்டி இழுப்பது போன்ற செய்திகள் ஐந்தாம்பத்தில் உள்ளது.
  • பிற்காலத்தில்கல்வெட்டுகளில் இடம் பெற்ற மெயகீர்த்திகளின் போக்கு பதிகங்களில் காணப்படுகிறது” என்கிறார் தமிழண்ணல்
முக்கிய அடிகள்:
  • ஈத்ததுஇரங்கான்ஈத்தொறும்மகிழான்
    ஈத்தொறுமாவள்ளியன்
    மாரி பொய்க்குவது ஆயினும்
  • சேரலாதன்பொய்யலன்நசையே
    வாரார் ஆயினும், இரவலர் வேண்டித்
  • தேரில் தந்து, அவர்க்குஆர்பதன்நல்கும்
    நசையால் வாய்மொழி இசைசால் தோன்றல்