#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday, 19 September 2016

பட்டினப்பாலை


பட்டினப்பாலையின் உருவம்:
  • திணை = நெய்தல் திணையும்பாலைத்திணையும்
  • துறை = பொருள்வயின்பிரியக்கருதிய தலைவன் செலவழுங்குதல்(செலவழுங்குதல் = செல்லாது விடுதல்)
  • பாவகை = இடையிடையே ஆசிரியப்பா அமைந்த வஞ்சி நெடும் பாட்டு
  • அடி எல்லை    = 301
பெயர்க்காரணம்:
  • பாலைத்திணையையும், காவிரிப்பூம்பட்டினம்நகரின்வளத்தையும் ஒருங்கே கூறுவதால்பட்டினப்பாலைஎனப் பெயர் பெற்றது.
வேறு பெயர்கள்:
  • வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
  • பாலைபாட்டு
புலவர், தலைவன்:
  • பாடிய புலவர் = கடியலூர்உருத்திரங்கண்ணனார்
  • பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன்
உரை:
  • மறைமலையடிகள் உரை
  • ரா.இராகவையங்கார் உரை
பொதுவான குறிப்புகள்:
  • பட்டினப்பாலைபாடியமைக்காககடியலூர்உருத்திரங்கண்ணனார்க்குகரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள்பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
  • இந்நூலுக்குவஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது
  • பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.
  • இந்நூலில்163 அடிகள் வஞ்சிப்பாவல்அமைந்துள்ளது.
  • இந்நூல்அரகேற்றப்பட்ட இடம் = பதினாறு கால் மண்டபம்
  • பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதன் தலைநகரைஅழித்தபோது, அந்நகரில்இந்நூல்அரங்கேற்றப்பட்டபதினாறு கால் மண்டபத்தை அழிக்காதிருக்கஆணையிட்டான் என “திருவெள்ளரைக் கல்வெட்டு” கூறுகிறது.
  • இந்நூலில்கிளவித்தலைவனின் பெயர் கூறப்படவில்லை.
முக்கிய அடிகள்:
  • நீரின் வந்த நிமிர்பரிப்புரவியும்
    காலின் வந்த கருங்கறிமூடையும்
    வடமலை பிறந்த மணியும்பொன்னும்
    குடமலை பிறந்த ஆரமும்அகிலும்
  • தமவும்பிறவும்ஒப்ப நாடி
    கொள்வதுஉம் மிகை கொளாது
    கொடுப்பதூஉம்குறைகொடாது
    பல்பண்டம் பகர்ந்து வீசும்
  • முட்டாச்சிறப்பின்பட்டினம்பெறினும்
    வார்இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
    வாரேன்வாழியநெஞ்சே