Monday, 19 September 2016
நெடுநல்வாடை
Nellai pasanga
07:02
நெடுநல்வாடையின் உருவம்:
- திணை = முல்லைத்திணை, வஞ்சித்திணை(அகமும்புறமும் கலந்த நூல்)
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 188
பெயர்க்காரணம்;
- தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு நெடிய வாடையாகவும், கடமையாற்றும்வேந்தனுக்குநல்வாடையாகவும்திகழ்வதால்
நெடுநல்வாடை என் ஆயிற்று.
- நெடுமை + நன்மை + வாடை = நெடுநல்வாடை
வேறு பெயர்கள்:
- பத்து பாட்டின்இலக்கிய கருவூலம்
- மொழிவளப் பெட்டகம்
- சிற்பப் பாட்டு
- தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா)
புலவர், தலைவன்:
- பாடிய புலவர் = நக்கீரர்
- பாட்டுடைத் தலைவன் = தலையானங்கானத்துசெருவென்ற பாண்டியன்
நெடுஞ்செழியன்
உரை:
- கோதண்டபாணி பபிள்ளை உரை
- வேங்கடாசெட்டியார் உரை
திரு.வி.காவின் கூற்று;
- நூலின் பெயர் காரணத்தை திரு.வி.க அவர்கள், “வாடை துன்பத்தைக்குறிக்கும்; நல்ல என்பது அன்பை குறிக்கும்; நெடு என்பது அழியாமையைகுறிக்கும்; எனவே அழியாதுநீளும்நல்வாடை” என்றார்.
- திரு.வி.க அவர்கள்,”ஒரு சிறு புல் நுனியில்மருவும் ஒரு பனித்துளியிடை ஒரு பெரிய ஆலமரம்
காட்சி தருவது போல சிறிய நெடுநல்வாடையில் பெரிய உலகம், உயிர், அன்புத் தெய்வம் இவற்றின் திறன்கள் முதலியன காட்சி தருகின்றன”
என்றார்.
- திரு.வி.க அவர்கள், “நெடுநல்வாடை ஒரு பெருஞ்சுரங்கம்; நக்கீரர் கண்ட சுரங்கம்; தமிழ்ச்சுரங்கம்” என நூலை பாராட்டுகிறார்.
பொதுவான குறிப்புகள்:
- நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன்
நெடுஞ்செழியனைகுறிக்கிறதுஎனக்கூறியவர்நச்சினார்கினியர் ஆவார்.
- “கொற்றவை
வழிபாடேபாட்டின்நடுமணியாகப்பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்
- பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றதுஇந்நூல்.
- இதில் கூறப்பட்டுள்ள பாசறை = கூதிர் பாசறை
- பேராசிரயர்சுந்தரம்பிள்ளை, இந்நூலை,
பத்துப்பாட்டாதிமனம்பற்றினார்பற்றுவரோ
எத்துணையும்பொருட்கிசையும்இலக்கிணமில் கற்பனையே |
எனப்புகழ்கிறார்.
முக்கிய அடிகள்:
- குன்று குளிர்ப்பன்னக்கூதிர்ப்பானாள்
- வேம்புதலையாதநோன்காழ்எஃகம்
- சிலரொடுதிரிதரும் வேந்தன்
பலரொடுமுரணியபாசறைத்தொழிலே - மா மேயல்மறப்ப மந்தி கூர
- பறவை பதிவானவீழ, கறவை
கன்று கோள் ஒழியக்கடிய வீசி