Sunday, 18 September 2016
சீவக சிந்தாமணி
Nellai pasanga
23:49
சீவகசிந்தாமணியின் உருவம்:
- ஆசிரியர் = திருத்தக்கதேவர்
- காலம் = கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
- சமயம் = சமணம்
- பாவகை = விருத்தப்பா
- பாடல்கள் = 3145
விருத்தங்கள்
சீவகசிந்தாமணியின் வேறு பெயர்கள்:
- மணநூல்
- முக்திநூல்
- காமநூல்
- மறைநூல்
- முடிபொருள்தொடர்நிலைச் செய்யுள்(அடியார்க்குநல்லார்)
- இயற்கை தவம்
- முதல் விருத்தப்பா காப்பியம்
- சிந்தாமணி தமிழ் இலக்கியநந்தாமணி
ஆசிரியரின் வேறு பெயர்கள்:
- திருத்தகு முனிவர்
- திருத்தகுமகாமுனிவர்
- தேவர்
ஆசிரியர் குறிப்பு:
- திருத்தக்கதேவர் சோழமரபினர்.
- இவர் எழுதிய மற்றொரு நூல் = நரிவிருத்தம்
- சீவகசிந்தாமணியை தேவர் எட்டே நாட்களில் படைத்தார்.
- இவர் நூலைஅரங்கேற்றிய இடம் = மதுரை தமிழ் சங்கம்
- இவரை பற்றிய குறிப்பு கர்நாடக மாநிலம் சிரவணபெலகுளா கோவில்
கல்வெட்டில் உள்ளது.
நூல் அமைப்பு:
- 13 இலம்பகம்
- 3145 பாடல்கள்
- முதல் இலம்பகம் = நாமகள் இலம்பகம்
- இறுதி இலம்பகம் = முக்தி இலம்பகம்
நூல் குறிப்பு:
- சீவகன்சிந்தாமணியுடன்ஒப்பிடப்பட்டுள்ளான்.
- சிந்தாமணி என்பது கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி.
பொதுவான குறிப்பு:
- சைவனானகுலோத்துங்க மன்னன் விரும்பிகற்ற காப்பியம்
- நூல் முழுமைக்கும்சைவரானநச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார்.
- உ.வே.சாபதிபித்த முதல் காப்பியம் இது.
- கிறித்துவரானஜி.யு.போப்இந்நூலை, “தமிழில் உள்ள இலக்கியச்சின்னங்களுள் மிக உயர்வானது.
தமிழ்மொழியின்இலியதும்ஓடிசியுமான புதிய பெரிய
இக்காப்பியம்உலகப்பெருங்காப்பியங்களுள் ஒன்று” என கூறினார்.
- ஜி.யு.போப்திருதக்கதேவரை “தமிழ் கவிஞர்களுள் இளவரசன்”
எனப்புகழ்ந்துள்ளார்.
- வடமொழியில் உள்ள கத்திய சூளாமணி, சத்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது.
- கம்பர்,
“சிந்தாமணியிலும் ஓர் அகப்பை முகந்துகொண்டேன்”
என்று கூறியதாக செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.
நச்சினார்கினியர்:
- இவர் சைவர்.
- சீவசிந்தாமணிக்கு இருமுறை உரை எழுதியதாக கூறப்படுகிறது.
- இவரை,
“உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்”
எனப்போற்றுவர்.
- இவர் கொண்டு கூட்டி பொருள் உரைப்பதில் வல்லவர்
- இவர் “தமிழ்மல்லிநாதசூரி” எனப்போற்றப்படுவார்
மேற்கோள்:
- இவ்வாறாகப்பிறப்பதுவோ
இதுவோமன்னற்கு இயல் வேந்தே - மெய்வகை தெரிதல் தம்மை
விளங்கிய பொருள்கள் தம்மை
பொய்வகைஇன்றித்தேறல் காட்சி
ஐம்பொறியும் வாட்டி
உய்வகைஉயிரைத்தேயாது
ஒழுகுதல் ஒழுக்கம், மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே
இருவினையும்கழியும் என்றான்