Monday, 19 September 2016
திருக்குறள்
Nellai pasanga
06:52
திருக்குறளின் விளக்கம்:
- ஆசிரியர்
= திருவள்ளுவர்
- பாவகை
= குறள் வெண்பா
பெயர்க்காரணம்:
- திரு + குறள் = திருக்குறள்
- குறுகிய அடிகளைகொண்டதால்இப்பெயர் பெற்றது.
- திருக்குறள் என்பது “அடையடுத்தகருவியாகு பெயர்”
திருக்குறளின் சிறப்பு கூறுபவை:
திருக்குறளின் முன்னோடி
எனப்படுவது
|
புறநானூறு
|
திருக்குறளின் விளக்கம்
எனப்படுவது
|
நாலடியார்(சமணமுனிவர்கள்)
|
திருக்குறளின் பெருமையை
கூறுவது
|
திருவள்ளுவ மாலை
|
திருக்குறளின் சாரம்
எனப்படுவது
|
நீதிநெறிவிளக்கம்(குமரகுருபரர்)
|
திருக்குறளின் ஒழிபு
எனப்படுவது
|
திருவருட்பயன்(உமாபதி
சிவம்)
|
திருக்குறளின் வேறு பெயர்கள்:
- திருவள்ளுவம்
- தமிழ் மறை
- பொதுமறை
- முப்பால்
- பொய்யாமொழி
- தெய்வநூல்
- வாயுறைவாழ்த்து
- உத்தரவேதம்
- திருவள்ளுவப் பயன்(நச்சினார்க்கினியர்)
- தமிழ் மாதின் இனிய உயர் நிலை
- அறஇலக்கியம்
- அறிவியல் இலக்கியம்
- குறிக்கோள் இலக்கியம்
- நீதி இல்லகியத்தின்நந்தாவிளக்கு
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
- நாயனார்
- தேவர்(நச்சினார்க்கினியர்)
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
- நான்முகன்
- மாதானுபாங்கி
- செந்நாப்போதார்
- பெருநாவலர்
- பொய்யில் புலவன்
திருவள்ளுவரின் காலம்:
- கி.மு.1
= வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
- கி.மு.31
= மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
- கி.மு.1-3
= இராசமாணிக்கனார்
நூல் பகுப்பு முறை:
- பால்
= 3(அறத்துப்பால், பொருட்பால்,
இன்பத்துப்பால்)
- அதிகாரம்
= 133
- மொதப்பாடல்கள் = 1330
- இயல்கள்
= 9
அறத்துப்பால்:
- அறத்துப்பால்38 அதிகாரங்களையும்4 இயல்களையும்
உடையது.
- பாயிரவியல்
= 4 அதிகாரங்கள்
- இல்லறவியல் = 20 அதிகாரங்கள்
- துறவறவியல் = 13 அதிகாரங்கள்
- ஊழியல்
= 1 அதிகாரங்கள்
பொருட்பால்:
- பொருட்பாலில்70 அதிகாரங்களையும்3 இயல்களையும்
உள்ளது.
- அரசியல்
= 25 அதிகாரங்கள்
- அங்கவியல்
= 32 அதிகாரங்கள்
- குடியியல்
= 13 அதிகாரங்கள்
இன்பத்துப்பால்:
- இன்பத்துப்பால்25 அதிகாரங்களையும்2 இயல்களையும்
உடையது.
- களவியல்
= 7 அதிகாரங்கள்
- கற்பியல்
= 18 அதிகாரங்கள்
திருக்குறளின்உரைகள்:
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
தருமர்மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமேலழகர், - திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர்வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர் |
- திருக்குறளுக்கு உரை எழுதியவருள்காலத்தால்முந்தியவர் = தருமர்
- திருக்குறளுக்கு உரை எழுதியவருள்காலத்தால்பிந்தியவர் = பரிமேழலகர்
- மு.வ,
நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.
பொதுவான குறிப்புகள்:
- திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.
- சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையை கூறுகின்றன.
- திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன்
ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்துதஞ்சையில்வெளியிட்டார்.
- தை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்
- தமிழிற்கு “கதி” எனப்படுவது = க – கம்பராமாயணம், தி – திருக்குறள்
- திருக்குறளில்12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ
அவை 0.4%
ஆகும்.
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு;
- இலத்தின் = வீரமாமுனிவர்
- ஜெர்மன் = கிரால்
- ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
- பிரெஞ்ச் = ஏரியல்
- வடமொழி =அப்பாதீட்சிதர்
- இந்தி = பி.டி.ஜெயின்
- தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை
சிறப்பு:
- பாரதியார்வள்ளுவரை பாராட்டுதல்
வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து
வான்புகல் கொண்ட தமிழ்நாடு |
- பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில்யாங்கணும்பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.
- மனோன்மணியம்சுந்தரனார்வள்ளுவரை புகழ்தல்
வள்ளுவர் செய்
திருக்குறளைமறுவறநன்ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோமனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி |
சுத்தானந்தபாரதி கூறுவது
எம்மதம்எவ்வினமும்எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம் |
திரு.வி.க கூற்று:
- திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோஉரியதன்று; அது மன்பதைக்குஉலகுக்குப் பொது.
கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூற்று:
- திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குதெரிந்திருக்காது.
திருக்குறள் என்னும் ஓர் நூல்
தோன்றியிராவிட்டால்தமிழ்மொழிஉலகிற்குதெரிந்திருக்காது.
முக்கிய அடிகள்:
- அறத்தான்வருவதே இன்பம்
- மனத்துக்கண்மாசிலன் ஆகுதல் அறம்
- திருவேறுதெள்ளியராதலும் வேறு
- பெண்ணிற்பெருந்தக்கயாவுள்
- ஊழிற்பெருவழியாவுள
- முயற்சி திருவினையாக்கும்
- இடுக்கண் வருங்கால்நகுக
- கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
- ஒறுத்தார்க்குஒருநாளை இன்பம்