Monday, 19 September 2016
திரிகடுகம்
Nellai pasanga
06:52
திரிகடுகத்தின் உருவம்:
- ஆசிரியர்
= நல்லாதானர்
- பாடல்கள்
= 100 + 1
- பாவகை
= வெண்பா
பெயர்க்காரணம்:
- சுக்கு,
மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத்தீர்ப்பான. அதனை போன்றுஇந்நூலில்
அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும்உள்ளந்தின்நோயைத்தீர்க்கும்.
- திரி = மூன்று
- கடுகம் = காரமுள்ள பொருள்
ஆசிரியர் குறிப்பு:
- இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
- “செருஅடுதோள்நல்லாதன்”
எனப்பாயிரம்குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய்இருந்திருக்கலாம்எனக் கருதப்படுகிறது
பொதுவான குறிப்புகள்:
- “திரிகடுகம்=சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது
- இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
- இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்”
என்னும் சொல் வருகிறது.
- மருந்தின்பெயரால் பெயர் பெற்ற நூல்.
- இந்நூலில்66
பாடகளில் நன்மை தருபவை எவை என்பது
பற்றிக்கூறப்பட்டுள்ளது.
- இந்நூலில்34
பாடல்களில் தீமை தருபவை எவை
எனக்கூறப்பட்டுள்ளது.
- கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.
- 300 அறக்கருத்துக்கள்இந்நூலில்கூறப்பட்டுள்ளது.
முக்கிய அடிகள்:
- நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
- வேளாளன் என்பான் விருந்திருக்கஉண்ணாதான்
- தாளாளன் என்பான் கடன்படவாழாதான்
- நிறை நெஞ்சம் உடையானைநல்குரவுஅஞ்சும்
- நட்பின்கொழுநனை பொய் வழங்கின்இல்லாகும்
- கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி