Monday, 19 September 2016
நம்மாழ்வார்
Nellai pasanga
06:57
குறிப்பு:
- இவரின் ஊர் ஆழ்வார்திருநகரிஎனப்படும்திருக்குருகூர்
- இவர் இறைவனின் அம்சமாகப்பிறந்தவர்
- பெற்றோர் = காரியார், உடைய நங்கை
- பிறந்தது முதல் 16 வயது வரை ஊமையாக இருந்தவர்
- இவர் தவம் இருந்த மரத்தை “திருப்புளி ஆழ்வார்” என்பர்
- இவரின் திருவாய்மொழியை “திராவிட வேதம், திராவிட வேத சாரம், செந்தமிழ் வேதம், ஆன்றதிருமுறைகள் ஆயிரம்” எனப்போற்றுவர்
- இவரின் நான்கு நூல்களையும் “சதுர்வேதத்திற்கு நிகர்” எனக்கூறுவர்
- இதன் வியாக்கியானங்கள் “பகவத விஷயம்” எனப்போற்றப்படுகிறது
- இவரின் பாடல்கள்இசையோடுபாடப்பட்டவை
- நம்மாழ்வார் உடல்(அவையவி) மற்ற 11 ஆழ்வார்களும் உறுப்பு(அவையம்) போன்றவர்கள்
- சைவத்திற்கு மாணிக்கவாசகர் போன்றுவைணவத்திற்குநம்மாழ்வார்
- நம்மாழ்வாரையேதெய்வமாகப்போற்றியவர் = மதுரகவியாழ்வார்
- மானிடம் பாடிய ஆழ்வார் = நம்மாழ்வார்
- மானிடம் பாடிய நாயன்மார் = சுந்தரர்
- மலையை “நெடுமால்” எனவும், மழையை “நாராயணன் வருகை” எனவும், நிலவை “ஒளிமணிவண்ணா” எனவும் பாடியவர்
- திரு.வி.கநம்மாழ்வாரை, “நம்மாழ்வார் ஒரு நாட்டிற்கோ, ஒரு சமயத்திற்கோ, ஓர் இனத்திற்கோ மட்டும் உரியவர் அல்லர். அவர் எல்லா நாட்டிற்கும், எல்லாச்சமயத்திற்கும், எல்லா இனத்திற்கும் உரியவர். எல்லோரும் “நம்
ஆழ்வார்” எனப்போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ்நாட்டை மனத்தால் நினைத்து, வாயால் வாழ்த்தி, கையால் தொழுகிறேன்” என்றார்.
வேறு பெயர்கள்:
- சடகோபர்
- நம்மாழ்வார்
- பராங்குசர்
- மாறன்
- ஆறு அங்க பெருமான்
- குருகைக்காவலன்
- வகுளாபரணன்
- தமிழ் மாறன்
- வேதம் தமிழ் செய்த மாறன்
- காரிமாறன்
- வைணவத்து திராவிட சிசு
படைப்புகள்:
- திருவிருத்தம் = ரிக் வேதம்
- திருவாசிரியம் = யசூர் வேதம்
- திருவாய்மொழி = சாமவேதம்
- பெரிய திருவந்தாதி = அதர்வணவேதம்
மேற்கோள்:
- அற்றதுபற்றெனில் உற்றது வீடு
- வாய்கொண்டு மானிடம் பாடவந்தகவியல்லேன்
- ஆடிஆடி அகம் கரைந்து, இசை
- பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி
நாடி நாடிநரசிங்கா! என்று
வாடி வாடும்இவ்வாள்நுதலே - உண்ணும் சோறும்பருகும்நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்