#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

Powered by Blogger.

Monday, 19 September 2016

திருமுருகாற்றுப்படை


திருமுருகாற்றுப்படையின் உருவம்:
  • பொருள் = ஆற்றுப்படை
  • திணை = புறத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 317
கடவுள் வாழ்த்து போன்றது;
  • பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
  • பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
  • வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.
புலவர், தலைவன்:
  • பாடிய புலவர் = நக்கீரர்
  • பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான்
வேறு பெயர்:
  • முருகு
  • புலவராற்றுப்படை
உரை:
  • நச்சினார்க்கினியர் உரை
  • பரிமேலழகர் உரை
முருகனின் அறுபடை வீடு:
தலங்கள்
தலக்குறிப்பு
திருப்பரங்குன்றம்
மதுரைக்கு தென்மேற்கில் உள்ளது
திருச்சீர்அலைவாய்
சீராக வந்து மோதும் அலைகளின் கரை வாயிலில் அமைந்துள்ள திருச்செந்தூர்
திரு ஆவின்குடி
பொதினிமலை. நாளடைவில் இதுவே பழனிமலை என் ஆயிற்று.
திருவேரகம்
இதனை திருப்பதி என்று நச்சினார்கினியர் கூறுகிறார்
மலைப்பகுதி
முருகன் குடியிருக்கும் குன்றுகள்
பழமுதிர்சோலை
மதுரையை அடுத்துள்ள அழகர் மலை. இது திருமால் இருஞ்சோலை எனவும் வழங்கப்படுகிறது.
நூல் குறிப்பிடும் செய்திகள்;
  • முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
  • இரண்டாம் பகுதி = திருச்சீர்அலைவாய்(திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
  • மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி(பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
  • நான்காம் பகுதி = திருவேரகம்(திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
  • ஐந்தாம் பகுதி = மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
  • ஆறாம் பகுதி = பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.
பொதுவான குறிப்புகள்:
  • பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
  • நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை
  • ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.
  • முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.
முக்கிய அடிகள்:
  • உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
    பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)
  • இழுமென இழிதரும் அருவிப்
    பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)
  • ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
    மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
  • முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
    கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்